Breaking

LightBlog

Monday 17 April 2017

சம்மாந்துறை மத்திய மகாவித்தியாலய பாடசாலை மதில்கள் உடைந்து விழும் அபாயம்.

சம்மாந்துறையில் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்களிப்புச் செய்யும் சிறந்த பாடசாலைகளுல் முதன்மையானதாக, பழமை வாய்ந்ததாக சம்மாந்துறை மத்திய மகாவித்தியாலயம் விளங்குகிறது.

சிறந்த கல்விமான்கள், பண்டிதர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்கள் என உருவாக்கி சம்மாந்துறையை இப்போதும் தலைநிமிர்ந்து நடக்க வைத்து கம்பீரமாக காட்சியளிக்கும் பாடசாலையாக சம்மாந்துறை மத்திய மகாவித்தியாலயம் விளங்குகிறது.



இத்தகு பெருமை மிக்க சம்மாந்துறை மத்திய மகாவித்தியாலய   பாடசாலையின் சுற்று மதில்கள் (அமீர் அலி நுால் நிலையம் முன்பாக உள்ள பகுதி) மிகவும் அபாயகரமாகவும், உடைந்து சாய்ந்து விழுவது போன்றும் காட்சி தருவது மிகவும் வேதனையான விடயமாகும்.



பாடசாலை விட்டு சின்னஞ் சிறு மாணவர்கள் முதல் கொண்டு வளர்ந்த மாணவர்கள் வரை அந்த மதில் ஓரமாக சென்று கொண்டிருக்கின்றார்கள் இது மாணவர்களுக்கு மிகவும் ஆபத்தையே விளைவிக்கும்.



அந்த மதில்கள் சாய்ந்து கீழே விழுந்து ஆபத்தை தோற்று விக்க முன் பாடசாலை நிர்வாகம் இது விடயத்தில் கவனம் செலுத்தி மிகப் பழமையான மதிலாக காட்சியளிக்கும் அதனை பலப்படுத்தி புதிதாக நிர்மானிப்பதற்கு முன் வர வேண்டும். 



மாணவர்களை ஆபத்துக்களில் இருந்து தடுக்க மிக விரைவாக அவற்றை திருத்தம் செய்வது அவசியமாகவுள்ளது காரணம் அந்த மதில்கள் அமைந்திருப்பது கல்முனை-அம்பாறை பிரதான வீதி ஓரமாகும் அந்த வீதியால் அதிக வாகணப் போக்குவரத்துக்கள் இடம் பெறுவதனால் அதிர்வின் காரணமாக அவை கீழே சாய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.



ஆகவே..!! சம்மாந்துறை மத்திய மகாவித்தியால அதிபர் மற்றும் பாடசாலை நிர்வாகம் இது விடயத்தில் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயவு செய்து வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.


மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.
படங்கள் உதவி - ஜவாஹிர்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog