Breaking

LightBlog

Monday 28 November 2016

பிடல் காஸ்ட்ரோ மறைவு...!வட கொரியா 3 நாள் துக்கம் அனுசரிப்பு


கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என வட கொரியா தெரிவித்துள்ளது.

வட கொரியா:

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ நேற்று முன்தினம் தனது 90-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கியூபாவில் 9 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது. பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிடல் காஸ்ட்ரோ மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என வட கொரியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வடகொரியா பத்திரிகைகள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் "கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று (நவம்பர்) 28-ம்தேதி தொடங்கி 30 வரை துக்கம் அனுசரிக்கப்படும். அரசு அலுவலகங்களின் வெளியில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

"நெருங்கிய நண்பர், கொரிய மக்களின் தோழர் என பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு வட கொரிய அதிபர் கிம்ஜாங்-உன் இரங்கல் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்ப்பதில் வட கொரியாவுடன், கியூபா கைகோர்த்து நின்றது குறிப்பிடத்தக்கது.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog