Breaking

LightBlog

Monday 28 November 2016

குழந்தைகள் அணிய விரும்பும் உடைகள் எவை..?


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புதிய ஆடைகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும் விழாக்கள் என்றாலே குழந்தைகளின் முதல் சந்தோஷம் புதிய ஆடைகளை அணிவதுதான். இன்னும் முக்கியமாக பள்ளிக் கூடங்களில் வாரத்தில் ஒரு நாள் கலர் ஆடைகளை அணிவதையே பெரும்பாலான 

குழந்தைகள் விரும்புகின்றனர். இப்படி குழந்தைகளுக்கு ஆடைகள் மீது எப்போதும் அதீத கவனம் இருக்கும். தன்னைவிட இன்னொரு குழந்தை அழகான ஆடை அணிந்திருந்தால் இந்த குழந்தைக்கு கோபமும், அழுகையும், கூடவே பொறாமை உணர்வும் அதிகரிக்கும் என்கிறது ஒரு ஆய்வு. 

சரி குழந்தைகளுக்கு எந்த மாதிரியான ஆடைகள் பிடிக்கும், எந்த வயதிலிருந்து இந்த விருப்பம் அதிகரிக்கிறது போன்ற விஷயங்களை இங்கு பார்ப்போம்,

குழந்தைகள் ஆடைகளை விரும்பும் வயது எது?

மூன்று வயது முதலே குழந்தை ஆடைகளை ரசிக்க ஆரம்பிக்கும். ஐந்து வயதுக்கு மேல் அதில் நாட்டம் அதிகரிக்கும். ஆனால் தனக்கு இது வேண்டும் என தேர்ந்தெடுக்கத் தெரியாது. ஐந்து வயதுக்கு மேல் தனக்குப் பிடித்த ஆடைகளை கேட்டு பெற்றொர்களிடம் அடம்பிடிக்க ஆரம்பிக்கும். 

குழந்தைகளுக்கான ஆடைகள் எவை?

இன்றைய சூழலில் வயது வந்தோரைக் காட்டிலும், குழந்தைகளின் ஆடைகளுக்கே அதிக செலவு பிடிக்கிறது. குழந்தைகளின் ஆடைகளில் நுணுக்கமான பல வேலைப்பாடுகள் செய்யப்பட்டுகின்றன. அவர்களுக்கான ஆடை தயாரிப்புகளில் அதிக அக்கறை காட்டுகின்றனர் டிரெஸ் டிசைனர்கள். பல வித்தியாசமான வண்ணங்களிலும், டிசைன்களிலும் ஏராளமான ஆடைகள் ஷோரூம்களில் விற்கப்பட்டு வருகின்றன. கவுன், ஷார்ட்ஸ், பைஜாமா, சல்வார் கம்மீஸ், ஸ்கர்ட், ஜீன்ஸ், சட்டை, சோளி, குர்தி, குர்தா என அவற்றுக்குப் பொருத்தமாக பெல்ட், கண்ணாடி, ஷூ என எல்லா வகையான பொருட்களும் குழந்தைகளின் கவனத்தைக் கவர விற்கப்பட்டு வருகின்றன. 

குழந்தைகள் அதிகம் விரும்பும் ஆடைகள்?

என்னதான் குழந்தைகளுக்கான உடைகளில் நாளுக்கு நாள் வித்தியாசம் காண்பித்து வந்தாலும், 'பார்பி' ஆடைகளுக்கு எப்போதுமே மவுசு குறைவது இல்லை. அதற்கு காரணம், பெரும்பாலான குழந்தைகள் கார்ட்டூனை விரும்புவதுதான். பெண் குழந்தைகள் தேர்வு செய்யும் ஆடைகளில் டாப் லிஸ்டில் இருப்பது 'பார்பி' தான். ஆண் குழந்தைகளைப் பொருத்தவரை, ஸ்பைடர் மேன், அயர்ன் மேன் போன்ற கதாப்பாத்திரங்கள் உள்ள ஆடைகள் தான். 


பெற்றோர்கள் எந்த மாதிரியான உடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்?

ஒவ்வொரு குழந்தைகளின் வயதைப் பொறுத்து அவர்களுக்கான ஆடைகளை பெற்றோர்கள் தேர்ந்தெடுப்பது அவசியம். பச்சிளம் குழந்தைகளுக்கு எப்போதும் காட்டன் ஆடைகள் மட்டுமே சிறந்தது. அவர்களுடைய சருமத்தை சேதப்படுத்தும் விதமாக இருக்கும் உடைகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, மணிகள், கற்கள், ஹெவியான எம்ப்ராய்டரி டிசைன்போ

ன்ற வேலைபாடுகளால் ஆன ஆடைகளைத் தவிர்ப்பது அவசியம். அதே போல ஐந்து முதல் ஆறு மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொக்கி, பெல்ட், ஸ்பிரிங் போன்றவை உள்ள ஆடைகளை தேர்ந்தெடுக்காமல் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இந்த மாதங்களில்தான் குழந்தைகள் தவழ ஆரம்பிப்பார்கள். அவர்கள் தவழும் பொழுது கை மற்றும் கால் முட்டிகளில் அழுத்தி காயம் ஏற்பட செய்யலாம். அல்லது அது போன்ற ஆடைகளை கடித்து வாய்க்குள்ளும் செல்லும் அபாயம் உள்ளது. 

ஒரு வேளை வீட்டில் இரண்டு குழந்தைகளோ, அதற்கு மேற்பட்டோ ஒரே வயதில் இருந்தால் அவர்களுக்கு ஒரே மாதிரி டிசைன்களில் ஆடைகளை வாங்கிக் கொடுங்கள். வெவ்வேறு டிசைன்களில் வாங்கிக் கொடுக்கும் பொழுது அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை வர வாய்ப்புகள் அதிகம். 

குழந்தைகளுக்கான ஆடைகள் எப்படி இருக்க வேண்டும்?

பத்து மாதத்துக்கு மேல் குழந்தைகள் நடக்கத் தொடங்கி விடும். இந்த வயது நடை பழகும் வயது என்பதால், அடிக்கடி கீழே விழுந்து, எழ வாய்ப்புகள் உண்டு. எனவே, இந்த நேரங்களில் நீளமான உடைகளை அவர்களுக்கு அணிவிப்பதை தவிர்த்திடுங்கள். மேலே சொன்னது போல ஐந்து வயதுக்கு மேல் அவர்களே ஆடைகளை தேர்வு செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

குழந்தைகளுக்கு ஆடைகளை தேர்வு செய்யும்போது முடிந்தவரை காட்டன் ஆடைகளை தேர்வு செய்வதே நல்லது. இறுக்கமான ஆடைகளை அணிவிக்காதீர்கள். 

மற்றவர்கள் கண்களை பறிக்கும்படியான நிறத்தில் இருக்கும் ஆடைகளை தவிருங்கள். வெயில், குளிர் போன்ற காலத்துக்கு ஏற்ப உடைகளை குழந்தைகளுக்கு அணிவிப்பது நல்லது. முடிந்த வரை சிறிய வயதில் உடலை ஒட்டினார் போல் இருக்கக் கூடிய ஜீன்ஸ் வகைகளைத் தவிர்த்து விடுங்கள். இது அவர்களுடைய சருமத்தை சேதப்படுத்தும்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog