Breaking

LightBlog

Thursday 20 April 2017

கதிரு பொறுக்கி சூடடிக்கலாமா மக்காள்?


கடந்த இரு தேர்தலில்களிலும் ஒவ்வொரு கிழக்கு முஸ்லிம் மகனினாலும் மகிந்தவை பலி தீர்க்கும் படலமே

முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இன்று அனைத்து சூட்சுமங்களிம் முடிச்சவிழ்க்கப்பட்டு ஞானசாரரும் மைத்திரியும் ஒரே மேசையில் காதல் கொள்வதைக் காணும் போதும், நல்லாட்சியில் பெசன் பக் பற்றி எரிந்திட்ட போதும், மறிச்சுக்கட்டி காணிகள்

 மீது தடையிட்ட போதும், மாடறுப்புத்தடை உத்தரவின் போதும், மாயக்கல்லி மலையில் சிலை வைத்தும் பல்லிழித்து கோடிகள் வாங்கிய கேடிகளின் வாய்திறவா நிலையையும் தற்போது பொது மக்கள் ஞானக்கண்கள் திறந்து நோக்குகின்றார்கள். 

அரசியலில் அடிப்படை வாக்கு பலமின்றி தடம்பதித்து காய் ஆய்வதென்பது மச்சக்காரர்களுக்கு மட்டும் சாத்தியமான விடையம். இதற்கு கிழக்கு மாகாணத்தில் பிறக்காது கிழக்கிலே தேர்தல் கேட்டு வென்ற தலைவர் ஹக்கீம் நல்லதொரு சான்று. 

அக்கரைப்பற்றில் அடிப்படையிலேயே சுமார் 25000 வாக்குகளை கொண்ட தலைவர் அதாவுல்லாஹ். ஆனால் ,கடந்த தேர்தலில் சுமார் 17000  வாக்குகளை மாத்திரம் மகிந்தவுக்கு ஆதரவு 

வழங்கியமைக்காக மக்களால் வழங்கப்பட்டமை உலகறிந்த விடையம். இதனைக் குறி வைத்து கிழக்கின் மலையை ,மயிர்கள் எல்லாம் குறைத்து பதிவிட்டு கொக்கரிப்பது அவர்களின் காழ்ப்புணர்வையையே காட்டி நிற்கின்றது.

விரும்பியோ விரும்பாமலோ திகாமடுல்ல தேர்தல் தொகுதி ஒரு பிரதேசசபை தேர்தலை சந்திக்குமாயின் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் பொத்துவில் தொகுதியில் அக்கரைப்பற்று மாநகரசபையையும் , அக்கரைப்பற்று 

பிரதேசசபையையும் கைப்பற்றும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மறுபக்கம் ஒரு மாகாண சபைத் தேர்தல் நடக்குமாயின் அதாவுல்லா அணி கூட்டு வைக்கும் பெரும்பான்மை கட்சியுடன் சேர்ந்து கடந்த இரு மாகாண சபையிலும் கைப்பற்றியது 

போன்று மூன்று ஆசனங்களையும் பேரம் பேசின் நான்காவது போனஸ் ஆசனத்தையும் பெற்றுக் கொள்ளும் நிலையிலேயே கட்சியின் முன்னெடுப்புகள் இருக்கின்றன.

இது இவ்வாறிருக்க,  சந்தர்ப்ப சூழ்னிலையால் கடந்த தேர்தலில் மகிந்தவின் மீது கொண்ட வெறுப்பினை வெளிக்கொணர , முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக அளிக்கப்படவிருந்த முஸ்லிம் வாக்குகள் அதாவுல்லாவுக்கும் போடமுடியாது கிழம்பி ஆடிய மயிலுக்கு 

கிடைத்ததென்பதே மறுக்கமுடியா உண்மை.எழுதி வைத்து கொள்ளுங்கள் இன்னுமொரு தேர்தல் வருமானால் பெறப்பட்ட 33000 வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கு பெறுவதென்பதும் அபூர்வமாகும். 

கொழும்பிலே சுக போகம் அனுபவிக்கும் அம்பாறை ஏஜெண்டுகளுக்கு அள்ளிக்கொடுத்திருக்கும் அதிகாரசபைப் பதவிகள் மூலம் அம்பாறையில் அடிப்படை வாக்கு வங்கிகளை நிறுவிக்கொள்ள முடியாது. நியமனத் தலைவர்கள் கொழும்பில் 

வாழ்வதனால் இக்கட்சிக்கு எந்த ஊரிலும் அடிப்படை வாக்கு வங்கி எதுவுமே கிடையாது. ஒவ்வொரு ஊராப்போய் வாக்கு பொறுக்கி பழம் ஆயலாமா? நஸீபும் வேண்டும். எல்லாருக்குமாகத்தான் 

சொல்லுறன்."கதிரு பொறுக்கி சூடடிக்கேலா மக்காள்" கிழக்கை அடிப்படை வாக்கு பலமுள்ள கிழக்கூரான் ஆள வேண்டும். கைகோர்ப்போம் வாருங்கள்.

Shifaan Bm
மருதமுனை.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog