Breaking

LightBlog

Thursday 20 April 2017

சண்டை வேண்டாம்...! அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே.


வடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 5 முறை அணுகுண்டு சோதனைகளையும், எண்ணற்ற முறை ஏவுகணை சோதனைகளையும் நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஐ.நா. சபையும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளபோதும், வடகொரியா தொடர்ந்து தனது சோதனையை செய்து வருகிறது. இந்நிலையில், 6–வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த வடகொரியா தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வடகொரியாவை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன் பங்குக்கு வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார். இதற்காக அவர் ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயாராக உள்ளார். 

அவரது உத்தரவின்பேரில் தென்கொரியாவுக்கு, அமெரிக்காவின் வலிமை மிகுந்த போர்க்கப்பல்களும், வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் வடகொரியா – அமெரிக்கா இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

வடகொரியாவும், அமெரிக்காவின் எந்த வித போருக்கம் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக கூறி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, அமெரிக்கா எந்த ஒரு சண்டைக்கும் முயற்சி எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். எனவே எந்தவித போர் பதற்றத்தையும் உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் கடைசியாக வடகொரியா சோதித்த ஏவுகணை தோல்வி குறித்து ஐ.நா. உறுப்பினர்கள் தயார் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில், வடகொரியாவின் அணுகுண்டு சோதனை திட்டம் குறித்து ஏப்ரல் 28-ல் பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டத்தை நடத்த அமெரிக்க அரசின் செயலாளர் ரெக்ஸ் ஹில்லர்சன் அழைப்பு விடுத்துள்ளார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog