Breaking

LightBlog

Friday 21 April 2017

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்த குடும்பங்களுக்கு மாதாந்தம் 50,000 ரூபா கொடுப்பனவு..!


மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கு மாதாந்தம் 50,000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

மீதொட்டமுல்ல உயர் அச்சுறுத்தல் வலயத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கே மாதாந்தம் 50,000 ரூபா படி எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. 

மேலும், அவ்வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டுஉபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக இரண்டரை இலட்சம் ரூபாவும், அவற்றை கொண்டு செல்வதற்காக 10,000 ரூபா போக்குவரத்து கொடுப்பனவும் கிடைக்கவுள்ளது. 

மீதொட்டமுல்ல சம்பவம் தொடர்பில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

முழுமையான நட்டஈடு பெற்றுக் கொடுக்கப்படும் வரை அல்லது நிரந்தர வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படும்வரை, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வலயங்களிலிருந்து வெளியேறுகின்ற குடும்பங்களுக்காக மாதாந்தக் கொடுப்பனவாக இந்த ஐம்பதாயிரம் ரூபாவும், பொருட்கள் போக்குவரத்துக்காக பத்தாயிரம் ரூபாவும் பெற்றுக் கொடுப்பதற்கு இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளவலயங்களில் வசிப்பவர்கள் வீடமைப்புஅபிவிருத்திஅதிகாரசபையின் வீட்டுக் கடன் தொகையினைபெற்றிருப்பின்,அவ்வீட்டுக் கடன்களும் இரத்துச் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

by-அத தெரண தமிழ்
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog