இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் செயற்பாட்டில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் ஒருபோதும் குறைக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மஹாநாயக்கர்கள் ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர்.
கண்டிக்கு நேற்று (புதன்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சங்கைக்குரிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே மஹாநாயக்க தேரர்கள் குறித்த கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு தீர்வு மற்றும் இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்ளும்போது ஜனாதிபதி ஒருபோதும் தமது அதிகாரங்களைக் குறைக்க வேண்டாம் என்ற அழுத்தமான கோரிக்கையுடன், 21 யோசனைகளை அவர்கள் தமது கடிதத்தில் முன்வைத்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக் கூறலுக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், ஜனாதிபதிக்கு மேற்படி மஹாநாயக்கர்களின் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment