ஸ்ரீநகர்: காஷ்மீரில் கல்வீச்சி தாக்குதல் நடத்தும் இளைஞர்கள் காஷ்மீர் பிரச்னைக்காக தங்களை தியாகம் செய்து கொண்டவர்கள் என அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் வன்முறை போன்ற தொடர் சம்பவங்களின் போது போலீசார் மற்றும் பாதுகாப்புபடையினர் மீது போராட்டக்காரர்கள், இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதி காஷ்மீரில், ஷெனாய் , நஷ்ரீ பகுதியில் மிக பெரிய சுரங்கப்பாதையை திறந்து வைத்த பிரதமர் மோடி பேசுகையில் காஷ்மீரில் சுற்றுலா மேம்பட வேண்டுமா அல்லது பயங்கரவாதம் வேண்டுமா எதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இளைஞர்களாகிய நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என பேசினார்.
இதற்கு பதிலடியாக தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, ஸ்ரீநகரில் சோனாவாரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசியது, காஷ்மீரில் சுற்றுலா, பயங்கரவாதம் குறித்து பிரதமர் மோடி பேசியது சரியல்ல. இங்குள்ள இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர்.
அது நியாயமான ஒன்று, தேசத்திற்காக போராட்டம் நடத்தி காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண தங்களை தியாகம் செய்கின்றனர். காஷ்மீரில் சுற்றுலாவால் தங்களது வாழ்வாதாரம் உள்ளது.
காஷ்மீரில் பிரச்சனைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் தீர்வு காண முடியாவிட்டால், அமெரிக்கா தலையிட்டு தீர்வு காண முயற்சிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
பரூக் அப்தல்லா பேச்சிற்கு பா.ஜ.,கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல் என்பதால் சந்தர்ப்பாத அரசியல் நடத்துகிறார் என விமர்சித்துள்ளது.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment