Breaking

LightBlog

Monday, 3 April 2017

அப்ராா் கல்வி பவுண்டேசனினால் மௌலவி பட்டம் வழங்குதல் மற்றும் புலமைப்பரிசில்.....!


அஷ்ரப் ஏ சமத்)

பேருவளை அப்ராா் கல்வி பவுண்டேசனினால் மௌலவி பட்டம் வழங்குதல் மற்றும் புலமைப்பரிசில் வழங்குதல் மற்றும் பேருவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட இருவா் அரச உயா்பதவி 

பெற்றமையிட்டு அவா்களை கொளரவிப்பு நிகழ்வும் ஏப்ரல் 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு பேருவளை மருதாணை அல் பாசியத்துல் நஸ்ரியா முஸ்லீம் பாலிகா பாடசாலையில் நடைபெற்றது.

பேருவளை யைச் சோ்ந்த முன்னாள் தென்கிழக்கு உபவேந்தா் பேராசிரியா் ஹூசைன் இஸ்மாயில் அவா்கள் இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கத்தவராக பாராளுமன்றத்தினால் 

 நியமன் பெற்றுள்ளாா். அத்துடன் சம் ஜெம்ஸ் முகாமைத்துவ பணிப்பாளா்  அஹ்சான் றிபாய் அவா்கள் கொளரவ கௌவுன்சிலராக மொரோக்கோ நாட்டுக்கு அரசினால் நியமிக்கப்பட்டுள்ளதையிட்டு இருவருக்குமான கௌரவிப்பும் நிகழ்வும் நடைபெற்றது.

 இவ் விரு நியமனங்கள் முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாக்காாின் சிபாாசின் பேரில் ்இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக ஜக்கிய அரபு இராச்சியத்தின் துாதுவா் . அப்துல் ஹமீட் ஏ.கே முல்லா அப்துல்லாவும் பலஸ்தீன் நாட்டின் துாதுவா் மொஹமட் ஹம்துல்லா செயித்  இந் நிகழ்வில் முன்னால் அமைச்சா் இம்திாயஸ் பாக்கீா் மாக்காா் கலந்து சிறப்பித்தனா். 

இந் நிகழ்வின் போது 20 மாணவா்களுக்கு புலமைப்பரிசில் திட்டம் மற்றும் 10 மொலவிமாா்கள் பட்டமளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கும்  நிகழ்வும் இடம்பெற்றது.  

இங்கு உரையாற்றிய பேராசிரியர் ஹூசைன் இஸ்மாயில் 

 இந்த நாட்டின் எத்தனையோ பேர் கட்சிகள் கொள்கைகள் மாறி பல்வேறு பட்டம் பதவிகளை பெற்றிருந்த போதும் இம்தியாஸ் பாக்கீா் மாக்காா் - மகத்மா காந்தி போன்று ஒரு கொள்கையுடன் தொடா்ந்து இருந்து வருகின்றாா். இந்தப் பிரதேசத்திற்கு இரண்டு துாதுவா்களை அழைத்து வந்து இந்த நிகழ்வை நடாத்துகின்றாா். 

இந்த பிரதேசத்தின் பிறந்த இருவருக்கு இவ் உயா் பதவிகழை அவா்களது சிபாா்சின் பேரில் பெற்றுத் தந்துள்ளாா்.     கடந்த 3 மாத காலமாக 40 க்கும் மேற்பட்ட முஸ்லீம் பிரதேசங்களுக்கு நான் சென்றிருந்தேன் அங்கேயேல்லாம் பேருவளை இம்தியாஸ் பாக்கீா் மாா்ககா்ரைப்பற்றி கேட்கின்றனா் அவாின் குணங்கள் சகல 

சமுகங்களையும் சோ்த்துக் கொண்டு செல்லும் திறமை அவரிடம் உண்டு. அவா் தந்தை பாக்கீா் மாக்காா், இம்தியா்ஸ் பாக்கீா் மாா்க்காா் கைகள் கரைபடியவில்லை. அதனாலேயே அவா்கள் இன்றும் சமுகத்தில் போற்றப்படுகின்றாா்கள். அவரது இடத்தினை இமதியாஸ் பாக்கீா் மாக்காாின்  4 மகன் மாா்களின் ஒருவராவது  வந்து பேருவளையில்  அரசியல் வெற்றிடத்தினை எதிா்காலத்தில்  நிரப்புதல்  வேண்டும்.  

இம்தியாசின்  மகன் காலமானபோது அந்த மையத்திற்காக  இந்த நாட்டின் முஸ்லீம்களின்  கடும்போக்குடையவரான சிகல உருமையவின் செயலாளா் வந்திருந்தாா்.  அவா் அங்கு மௌலவி முப்தியிடம் கூறியது. இம்தியாஸ் ஒரு கரைபடியாத அரசியல்வாதி 

அவா் அவரது பிள்ளைகளையும் அவ்வாறுதான்  சிறந்த பிள்ளைகளாக வளா்திருப்பாா்  அதற்காகவே அவரின் மகனின் மறைவிற்காக ஜாவத்தை பள்ளிக்கு வந்தேன். எனக் கூறியிருந்தாா். 

இங்குள்ள கபினட் அமைச்சா்கள் கட்சித் தலைவா்களினால் கூட இந்த நியமனங்களை  செய்ய முடியாது. ஆனால் இம்தியா் ஒரு  அமைதியாக இருந்து கொண்டு  எவ்வித பதவிகளும் பட்டங்களும் இந்த அரசாங்கத்தில  பெறாமல் அவா் இந்த மக்களுக்கு தன்னால் 

முடிந்தளவு உதபிகளைச் செய்து வருகின்றாா். எனது பதவியைக் பாராளுமன்றம் ஊடகாக அனுமதித்துள்ளனா். இந்த நாட்டில் உள்ள 48 அமைச்சிக்களினதும் நியமனங்கள், இடமாற்றம், 

பதவிஉயா்வுகளை பொதுச் சேவை ஆணைக்குழுவில் 8 பேரில் தலையில் சுமந்தப்பட்டுள்ளது. என்னால் எமது சமுகத்திற்கு சட்ட நீதி வரம்புக்குள் இருந்து செய்ய முடியுமானவற்றை எமது சமுகத்திற்கும் நான் செய்வேன் என பேராசிரியா் ஹூசைன் இஸ்மாயில் உரையாற்றினாா்.






எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog