Breaking

LightBlog

Monday, 3 April 2017

சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச குர்ஆன் மத்ரசாக்களில் போட்டி நிகழ்சிகள்....!


சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச குர்ஆன் மத்ரசாக்களில் கல்விபயிலும் மாணவ, மாணவிகளுக்கிடையில் மீலாதுன் நபி போட்டி நிகழ்சிகள் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசளினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இதில் வெற்றி 

பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு அண்மையில் கௌரவ பொருளாளர் ஹாசீம் மௌலவி அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசளில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதமஅதிதியாக சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசலின் கௌரவ தலைவர் வை.எம். ஹனீபா அவர்களும், கௌரவ அதிதியாகவும், அனுசரணையாளராகவும் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட பொருளாளரும், யஹியாகான் பௌண்டசனின் தலைவருமாகிய அல்ஹாஜ் ஏ.சீ. யஹியாகான் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வின் போது வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் கலந்து கொண்ட கௌரவ அதிதி வெற்றி பெற்ற 80 

மாணவ, மாணவிகளுக்கும் பணப்பரிசுகளும் வழங்கி வைத்தார்.
மேலும், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசளின் கௌரவ தலைவர் அவர்களின் சேவையை 

கௌரவித்து அல்ஹாஜ் ஏ.சீ. யஹியாகான் மற்றும் நிர்வாகத்தினரால் இணைந்து நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.




எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog