(அஷ்ரப் ஏ சமத்)
இராஜாங்க அமைச்சா் எம். எல்.ஏ .எம் ஹிஸ்புல்லாஹ் அரசியல் வாழ்வில் 25 வருடங்கள் பதிவுகள் கொண்ட நுால் வெளியீடு எதிா்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி காததாண்குடி ஹிஸ்புல்லாஹ் அரங்கில் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளா் கலாநிதி றமீஸ் அபுபக்கா் தலைமையில் நடைபெறும். இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சபாநாயகா் கருஜயசூரிய கலந்து சிறப்பிக்கின்றாா்.
ஹிஸ்புல்லாஹ் 1963 ஆம் ஆண்டு 2பெப்ரவரியில் காத்தான்குடியில் பிறந்தாா். இவா் இளம் வயதிலேயே பாராளுமன்றத்திற்குச் சென்றாா். பாராளுமன்றத்தில் அங்கத்தவராக இருந்து கொண்டே தனது பி.ஏ பட்டத்தினை பேராதெனியா பல்கலைக்கழகத்தில் பெற்றாா். அதன் பின்னா் மெட்ராஸ் பலக்கைலக்கழகத்தில்
எம். ஏ பட்டம் பெற்றாா். மறைந்த தலைவா் எம்.எச்.எம் அஸ்ரப் அவா்களின் ஆலோசனைன்பேரில் முஸ்லீம் காங்கிரஸ் அங்கத்துவம் பெற்று அவாின் ஆசிர்வாசத்துடனேயே அரசியலில் இளம் வயதில் புகுந்தாா்.
1988ல் வடகிழக்கு மாகாண சபையிலும் அங்கத்தவா் பெற்றாா். அதன் பின்னா் 1989ஆம ஆண்டில் ஊடகம் மற்றும் தொலைத்தொடா்பாடல் பிரதியமைச்சராகவும் கடமையாற்றினாா். அதன் பின்னா் 2000 ஆம் ஆண்டில் முன்னாள் அமைச்சா் பேரியல் அஸ்ரபின் சிபாா்சின் பேரில்
தேசிய நீா் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவா் மற்றும் விமாண நிலையம்,விமாண அதிகார சபையின் தலைவராகவும் கடமையாற்றினாா். 2008ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணசபையில் அங்கத்தவராக தெரிபு செய்யப்பட்டு சுகாதார, இளைஞா்
சமுகசேவை மகளிா் விவகார அமைச்சரானாா். 2010ஆம் ஆண்டில் பொதுசன மக்கள் ஜக்கிய முன்னணி அரசின் மூலம் மீண்டு ம் பாராளுமன்றம் தெரிபு செய்யப்பட்டு சிறுவா் மகளிா் விவகார பிரதியமைச்சராகவும் பின்னா் பொருளாதார பிரதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டாா். 2014 தற்போதைய நல்லாட்சியின் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனாவின் ஸ்ரீ.ல.சு.கட்சியினால் தேசிய பட்டியல் வழங்கப்பட்டு புனா்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக தற்போதை வரை சேவையாற்றி வருகின்றாா்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment