Breaking

LightBlog

Thursday, 30 March 2017

பேருவளை அப்ராா் கல்வி பவுண்டேசனினால் மௌலவி பட்டம்....!


(அஷ்ரப் ஏ சமத்)

பேருவளை அப்ராா்  கல்வி பவுண்டேசனினால்  மௌலவி பட்டம் வழங்குதல் மற்றும் புலமைப்பரிசில் வழங்குதல் மற்றும் பேருவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட இருவா் அரச உயா்பதவி பெற்றமையிட்டு அவா்களை கொளரவிப்பு நிகழ்வும்  ஏப்ரல் 02ம் 

திகதி  ஞாயிற்றுக்கிழமை  காலை 09.00 மணிக்கு பேருவளை மருதாணை அல் பாசியத்துல்  நஸ்ரியா முஸ்லீம் பாலிகா பாடசாலையில் நடைபெறவுள்ளது.

பேருவளை யைச் சோ்ந்த  முன்னாள் தென்கிழக்கு உபவேந்தா் பேராசிரியா்  ஹூசைன் இஸ்மாயில் அவா்கள் இலங்கை  பொதுச் சேவை ஆணைக்குழுவின்  அங்கத்தவராக அரசினால் நியமன் 

பெற்றுள்ளாா். அத்துடன் அஹ்சான் றிபாய் அவா்கள்  கொளரவ கௌவுன்சிலராக மொரோக்கோ நாட்டுக்கு அரசினால் நியமிக்கப்பட்டுள்ளதையிட்டு இருவருக்குமான  கௌரவிப்பும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக ஜக்கிய அரபு இராச்சியத்தின்  துாதுவா் . அப்துல் ஹமீட் ஏ.கே முல்லா அப்துல்லாவும்  பலஸ்தீன் நாட்டின் துாதுவா் மொஹமட்  ஹம்துல்லா செயித் கலந்து கொள்வாா்கள்.  மேலும் இந் நிகழ்வில்   முன்னால் அமைச்சா் இம்திாயஸ் பாக்கீா் மாக்காா் கலந்து சிறப்பிக்க உள்ளாா். 
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog