Breaking

LightBlog

Thursday, 30 March 2017

வீரவன்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டால், தங்களையும் விடுதலை செய்....!


நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிர போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில் விமல் வீரவன்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டால், தங்களையும் விடுதலை செய்யுமாறு அழுத்தம் பிரயோகித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படுவதற்கு கைதிகள் தயாராவதாக வெலிக்கடை சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சரத் பொன்சேகா, எஸ்.பீ.திஸாநாயக்க போன்ற பலர் தங்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ஏனைய கைதிகளுடன் நட்புடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

எனினும் அவர்களை போன்று அந்த தண்டனைகளை பொறுத்துக் கொள்வதற்கு மனரீதியான தைரியம் விமலுக்கு இல்லை என, கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உணவு பெற்றுக் கொள்வதனை நிராகரித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள விமலின் உடல் நிலையை கருத்திற்கு கொண்டு அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட வீரவன்ச, சுமார் மூன்று மாதங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog