Breaking

LightBlog

Wednesday, 7 December 2016

நாட்டில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.....


நாட்டின் பலபகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பொழியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும் என்றும் தென்மாகாணங்களில் 50 கிலோமீற்றர் வேகத்திற்கு காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மாகாணம் சப்ரகமுவா மாகாணம் மத்திய மற்றம் தென்மாகாணங்களில் காலை வேளையில் மழைபொழியக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் அந்தமான் தீவில் தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதால் 1400 சுற்றுலாப்பயணிகள் சிக்கியுள்ளதாகவும் அவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் படையினர் செயற்பட்டுவருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் மழையுடன் காற்றும் வேகமாக வீசுவதாகவும் அது புயலாக மாறும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
by-news.lk
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog