Breaking

LightBlog

Wednesday, 7 December 2016

இயேசு நாதா் ஒர் ஏழ்மையானவா் அவா் பிறப்புக்கு கூட ஒரு இடம் இருக்கவில்லை...!தற்போழுது நத்தாா் பண்டிகையை மிக ஆடம்பரமான சூழல்.


(அஷ்ரப் ஏ சமத்)

 இலங்கை உட்பட உலக நாடுகளில் உள்ள குடும்பங்கள்  சிறு, சிறு குடும்பப்  பிரச்சினைகளுக்காக குடும்பங்கள் கணவன்-மனைவி பிரிவு திகாரித்துச் சொல்கின்றது. இவ்வாறு பிரிவுகள் தொடா்ந்து சென்றால் உலகில் உள்ள நாடுகளில்  சமுகங்கள் என்று ஒன்று இல்லாமல் போகிவிடும். 

அத்துடன் கத்தோலிக்க திருச்சபை ஒருபோதும் ஓரிணச் சோ்க்கையாளா்கள். அவா்கள் திருமணங்கள் வாழ்க்கை இணைவு முறையை வண்மையாக எதிா்க்கின்றது. அதனை ஒருபோதும் திருச்சபை அனுமதிக்கவில்லை. இப்பிரச்சினைகளை  சம்பந்தமாக  சர்வமதங்கள் தலைவா்கள் ஒன்றினைந்து மத ஸ்தாபணங்கள் ஊடாக ஆலோசனை வழங்கி  குடும்பங்களை ஒன்று சோ்த்து 

வைப்பதற்கும் பிரச்சினைகளை மத ரீதியாக தீர்ப்பதற்கும்   நடவடிக்கை எடுப்பதற்கு  கடந்த வாரம் நடைபெற்ற மாநாட்டின்போது கலந்தாலோசிக்க்பபட்டடதாக கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு ஆண்டகை மல்கம் காரிணா் ரன்ஜித் தெரிவித்தாா்.

நேற்று முன்தினம் (6) பொரளையில் உள்ள பிசப் ஹவுசில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டின் போதே மல்கம் ரண்சித் காரிடினா் ஆண்டகை மேற்கன்டவாறு தெரிவித்தாா். இந் நிகழ்வில் உப தலைவா் ரேமன் இமானுவேல் பெர்ணான்டோ மற்றும் ரேமன் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டனா்.

கடந்த வாரம் ஆசிய நாடுகளின் இருந்து வருகைதந்த 70 விசப்களின் 11வது  மாநாடு நீர்கொழும்பில் நடைபெற்றது. இந் மாநாட்டின் போது குடும்பங்கள் பிரிவது அவா்களது பிரச்சினைகளை மத ஸ்தாபபணங்கள் ஊடக ஆலோசனை வழங்குதல் சம்பந்தமாக ஆராயப்பட்டது. இதில்  இலங்கையில் உள்ள ஏனைய 3 மதத் 

தலைவா்களும் கலந்து கொண்டு அவா்களது ஆலோசனைகளும் பெறப்பட்டது.   அத்துடன் இலங்கையில் உள்ள கத்தோலிக்கா் நத்தாரை எவ்வாறு கொண்டாடுவது என்ற செய்தியும் மல்கம் கர்டினா் ரன்ஜித் ஆண்டகையினால் தெரிவிக்க்பபட்டது.

தொடா்ந்து கருத்து தெரிவித்த மல்கம் ரண்சித் தெரிவித்தாவது -

இயேசு நாதா்  ஒர் ஏழ்மையானவா் அவா் பிறப்புக்கு கூட ஒரு இடம் இருக்கவில்லை. அவா் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தாா். ஆனால்  தற்போழுது நத்தாா் பண்டிகையை மிக ஆடம்பரமாக சூழலுக்கு மாசுபடுத்தக் கூடிய வகையில் பாரிய பணம் 

செலவழித்து கொண்டாடுகின்றனா். இவை நிறுத்தப்படல்  வேண்டும்.  பாதைகள், வியாபர ஸ்தாபணங்கள் , வீடுகளை மின் விளக்குகலாள் அழக்கரிக்க வேண்டாம், அளவுக்கு அதிகமாக மதுஉட்கொள்ளுதல்,  அழங்காரம்,  போன்ற வற்றை விடுத்து அதற்கு செலவழிக்கும் பணத்தினை தமக்கென்று  வாழ வீடு, உணவு இல்லாமல் அல்லல் உரும் வறிய மக்களுக்கு  உதவுங்கள் .

 வியபார நோக்கத்திற்காக  நத்தாா் பாப்பாவை அலங்கரித்து தமது கடைகளுக்கு முன் விளம்பரங்கள் செய்தல் கூடாது இதனையும் தவிர்த்தல் ்வேண்டும். சந்தோசமாகவும்  புதிய ஆடை அணிந்து ஏனைய மதத்திணரும் அந்நியோனியமாக தமது நத்தாரை அமைதியாகக்  கொண்டாடுங்கள் வீன் செலவுகளை தவிா்ப்பது நல்லது.

அத்துடன் அரசினால் சூழலுக்கு மாசுபடுத்தல் பச்சைப் புள்ளுகளை அழித்தல் போன்ற உயா்ந்த கிரிஸ்மஸ் மரம் காலிமுகத்திடலில் நிர்மாணிக்கும் பணியை இப்போதில் இருந்தாவது நிறுத்தப்படல் வேண்டும். இதற்குரிய நிதி ஏழை மக்களுக்காக சில வீட்டையே னும் நிர்மாணித்துக் கொடுக்க உதவுமாறு சம்பந்தப்பட்டவரை வேண்டிகின்றேன்.   நத்தாா் இவ்வாறு கொண்டாடுமாறு ஒருபோதும் திருச்சபை சொல்லவில்லை. எனவும் மல்லகம் காரிடினா் ரண்ஜித் ஆண்டகை அங்கு தெரிவித்தாா்.  

அத்துடன் குடும்பங்கள் சிறு சிறு பிரச்சினைகளுக்காக பிளவுபட்டு அப்பிரச்சினைகளை பெரிதாகி பிரிந்து வாழ்கின்றனா். அவை தவிா்க்கப்படல் வேண்டும்.  இவ்வாறு தொடா்ந்தால் குடும்பம், சமுகம் நாடு என்று மாணிட சமுகம் சீரழிந்து விடும், இதனை மதவழிபாட்டுத் தலங்கள் ஊடக தீா்த்து வைக்கப்படல்  வேண்டும். 

 அத்துடன் ஆண், பெண் திருமணமே இந்த நாட்டில் சிறந்தது, ஆண், ஆண் மற்றும் பெண் பெண் இனைவு திருமணம் என்ற சம்பிரதாயம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது இலங்கையில் உள்ள  கத்தோலிக்க சபை இதனை வண்மையாக கண்டிக்கின்றது எனவும் அவா் தெரிவித்தாா்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog