Breaking

LightBlog

Wednesday, 7 December 2016

சர்வதேச தரத்திலான பௌத்த திரைப்படம்....


இலங்கையில் ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் தின வைபவம் இடம்பெறுவதை முன்னிட்டு சர்வதேச தரத்திலான பௌத்த திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது.

இந்தத் திரைப்படத்திற்கு புத்தரின் பயணங்கள் அல்லது Horizons of Buddhism என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் சங்கைக்குரிய எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். 

இந்த திரைப்படத்தில் கௌதம புத்தரின் நாகதீபம், மஹியங்கனை, களணி விஜயம் தொடர்பான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளதாக கூறினார்.

இத்திரைப்படத்தில் இலங்கையைச் சேர்ந்த நடிகர், நடிகைகளின் பங்களிப்புடன் சனத் அபயசேகர திரைப்படத்தை இயக்கவுள்ளதாக சங்கைக்குரிய எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையிலும், இந்தியாவிலும், சீனாவிலும் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
by-news.lk
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog