கல்வி அமைச்சும் – இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவும் இணைந்து தேசிய ரீதியில் நடாத்திய ஆக்கத் திறன் போட்டியில் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் வித்தியாலயத்துக்கு மூன்று முதலாம் இடங்கள் கிடைத்துள்ளன.
மாணவர்கள் பிரிவில் பாத்திமா நுஸ்ரத், மற்றும் நளீபா றம்ஷத் ஆகியோரும் ஆசிரியர் பிரிவில் ஆசிரியர் அச்சி முஹம்மத் ஆகியோருமே 3 முதலாம் இடங்களைப் பெற்று வெற்றியீட்டியவர்களாவர்.
இவ்வெற்றியானது தாருஸ்ஸலாம் பாடசாலைக்கு மாத்திரமல்ல சம்மாந்துறைக்கும் , மாவட்டத்துக்கும் ,ஏன் கிழக்கு மாகாணத்துக்கும் பெருமை தேடித்தந்த வரலாற்று நிகழ்வாகும் .
வெற்றியீட்டிய மாணவிகளுக்கும் ஆசிரியருக்கும் பெறுமதியான சான்றிதழ்களும் மற்றும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வானது தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது .
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment