2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு 110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 165 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் வழங்கப்பட்டன.
இதேவேளை வாக்கெடுப்பின. போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் சமுகமளி த்திருக்கவில்லை.
குறித்த வாக்கெடுப்புக்கு நாமல் ராஜபக்ஷ, மக்கள் விடுதலை முன்னணியினர் மற்றும் கூட்டு எதிர்கட்சியின் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாக்கெடுப்பின் பின்னர் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாராளுமன்ற இலத்திரணியல்வாக்களிப்பு முறையும் பரீட்சிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றின் உறுப்பினர் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
by-news.lk
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment