Breaking

LightBlog

Thursday, 10 November 2016

இனவாதத்தை தூண்ட சிலர் முயற்சிக்கின்றனர்...!


தேசிய அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து அறிந்துக் கொள்ளாத சிலரே நாட்டினுள் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரவத்தவத்த பகுதியில் நேற்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தேசிய நெறிமுறை மற்றும் ஒழுக்கத்தை நிலைநாட்டுவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மேலும், அரசாங்கம் நல்லிணக்க நோக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog