Breaking

LightBlog

Wednesday, 9 November 2016

ட்ரம்பிற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட வாகனம் பற்றி தெரியுமா?


அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்பதை முன்னிட்டு அமெரிக்காவின் முன்னனி வாகன நிறுவனம் அவருக்காக பிரத்தியேக வாகனம் ஒன்றை தயாரித்துள்ளது.

‘The Beast’ என்ற புனைப்பெயரில் அறியப்படும் குறித்த வாகனமானது தற்போது பரிச்சார்த்தமாக செயல்படுத்தி பார்க்கப்பட்டு வருகின்றது.

அடுத்த ஆண்டு ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டதும் குறித்த வாகனம் அவரது பயன்பாட்டிற்காக வழங்கப்பட உள்ளது.

இதற்காக General Motors நிறுவனம் வாகனத்தின் அனைத்து பணிகளையும் கூடிய விரைவில் செய்து முடிக்க குறித்த வல்லுநர்களிடம் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க ஜானதிபதியின் அதிகாரப்பூர்வ வாகனமானது கறுப்பு வண்ணத்திலே இருக்கும், ஆனால் தற்போது பரிச்சார்த்தமுறையில் இருப்பதால் வேறுபட்ட வண்ணத்தில் குறித்த வாகனம் வீதி வலம் வருவதாக கூறப்படுகிறது.

ஒபாமா பயன்படுத்திய காரில் இருக்கும் அனைத்து வசதிகளும் இந்த காரிலும் இருக்கும் என்றாலும், தற்கால தேவைக்கு ஏற்ற வகையில் சிறு மாற்றத்துடன் வாகனம் சிறப்பு தோற்றத்துடன் வடிவமைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

இருப்பினும் புதிதாக உள்ளடக்கியுள்ள வசதிகள் என்ன என்பது மிக இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது

இதுவரை எந்த வாகன கட்டுமான நிறுவனமும் இதுகுறித்த தகவல்களை வெளியிடவில்லை என்றபோதும் General Motors நிறுவனத்திற்கு 3 வாகனம் வடிவமைத்து கட்டுமானத்திற்கான ஒப்பந்தம் கிட்டியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இது மட்டுமின்றி குறித்த நிறுவனத்திற்கு 15 மில்லியன் டொலர் கட்டணமும் செலுத்தியுள்ளதாக தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

உலகின் மிக முக்கிய நகரங்களில் ஒன்று வீதம் 12 கார்களை 12 நகரங்களில் நிறுத்தி பராமரிக்க அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கென வாகனம் ஒன்றிற்கு 1.5 மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒபாமா பயன்படுத்தும் காரானது மொத்தமாக 8 டன் எடை கொண்டது எனவும், இது Boeing 747 விமானத்தின் கதவின் எடைக்கு சமானம் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

by-lankasri
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog