Breaking

LightBlog

Tuesday, 15 November 2016

ஆஸ்கர் கனவு நிறைவேறியது: ஜாக்கிசான்..!


பிரபல நடிகர் ஜாக்கிசானின் 56 ஆண்டுகால திரைப்பயணத்திற்கு கவுரவம் அளிக்கும் விதமாக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருது பெற்றது குறித்து ஜாக்கிசான் கூறுகையில், நான் இங்கு நிற்கிறேன் என்பதையே நம்ப முடியவில்லை. இது ஒரு கனவு. ஒவ்வொரு முறை ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை காணும் போதும், என்னுடைய தந்தை உன்னிடம் நிறைய விருதுகள் உள்ளன எப்போது ஆஸ்கர் விருது கிடைக்கும் எனக் கேட்பார். அப்போது நகைச்சுவை கலந்த சண்டை காட்சிகள் நிறைந்த படங்களில் மட்டும் தானே நடிக்கிறேன் என நான் பதில் கூறுவேன்.

ரசிகர்களுக்கு நன்றி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த வண்ணமிகு விழாவில் ஜாக்கிசானுக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. விருதினை பெற்று கொண்ட ஜாக்கிசான் தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

கனவு நிறைவேறியது

ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என்ற கனவு நிறைவேறி இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்த ஜாக்கிசான், 23 ஆண்டுகளுக்கு முன்பு சில்வெஸ்டர் ஸ்டாலோனின் இல்லத்தில் அவர் வாங்கிய ஆஸ்கர் விருதை கையில் எடுத்து ஏக்கத்துடன் பார்வையிட்டதை நினைவு கூர்ந்தார்.

 தன்னுடைய 56 ஆண்டுகால திரையுலக பயணத்தில் பல்வேறு படங்களிலும் சண்டைக்காட்சிகளில் நடிக்கும் போது பல முறை எலும்புகள் முறிந்துள்ளதை சுட்டிக்காட்டிய ஜாக்கிசான், தற்போதைய ஹீரோக்களுக்கு சண்டைக்காட்சிகளில் தொழில்நுட்பங்கள் உதவி கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
by-puthiyathalaimurai
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog