நியூஸிலாந்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தையடுத்து, 3 மாடுகள் சிறிய பரப்பளவிலான மண் மேடு ஒன்றில் நிர்க்கதியாக நின்றுகொண்டிருந்தன.
நியூஸிலாந்தின் தென் தீவில் நேற்று முன்தினம் 7.8 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து, பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டன. இந்நிலையில், கய்கோரா எனும் சிறிய நகருக்கு அருகில் 3 மாடுகள் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தபோது அம் மாடுகளைச் சுற்றியிருந்த நிலப்பகுதி சரிந்து வீழ்ந்தது.
இதனால், சிறிய குன்று போன்ற பகுதியில் அம் மாடுகள் நிர்க்கதியாக இருந்தமை ஹெலிகொப்டரிலிருந்து படம் பிடிக்கப்பட்டுள்ளது. இம் மாடுகளின் உரிமையாளர் தொடர்பான விபரங்களோ இம் மாடுகளுக்கு எவ்வாறு உதவிகள் வழங்கப்பட்டன என்பது தொடர்பான விபரங்களோ உடனடியாகத் தெரிய வரவில்லை.
கய்கோரா நகருக்கு அருகிலேயே மேற்படி பூகம்பம் மையம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment