Breaking

LightBlog

Monday, 10 April 2017

சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் தார் வீதியாக்கப்பட்ட வீதிகள் திறந்து வைப்பு....!


சப்னி அஹமட்- 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முயற்சியினால் அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட தார் வீதிகளை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (10) காலை பாராளுமன்றில் உறுப்பினர் எம்.ஐ. மன்சூர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வு பிரதம 

அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,  நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டு வீதிகளை திறந்து வைத்தார்.

இதன் போது. அம்பாறை 10ஆம் வீதி, அம்பாறை 12ஏ வீதி, ஹிஜ்றா 02ஆம் வீதி, மதீனா உம்மா வீதி, முகைடீன் மாவத்தை குறுக்கு வீதி, மல் 06ஆம் என தார்வீதியாக்கப்பட்ட வீதிகள் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது

இந்நிகழ்வுக்கு கெளரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம் மாஹிர், ஏ.எல். தவம், ஆரிப் சம்சுடீன், 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் மன்சூர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கட்சிப்போராளிகளும் கலந்துகொண்டனர்.



எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog