Breaking

LightBlog

Sunday, 9 April 2017

சவளக்கடை 5ஆம் கொளனி சுனாமி வீட்டுத் திட்டத்திற்கு துரிதமாக குடிநீரை வழங்க மாஹிர் நடவடிக்கை...!


கடந்த 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் மருதமுனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களில் 15 குடும்பங்கள் நாவிதன்வெளி 

பிரதேசத்தின் கீழுள்ள சவளக்கடை 5ஆம் கொளனி பிரதேசத்தில் ஜம்மியத்துல் இஸ்லாமிய நிறுவனத்தினால் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

சுனாமி பாதிக்கப்பட்ட மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தில் நீண்டகாலமாக குடிநீர் இன்மையால் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தற்போது தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவில் நீர்குழாய்கள் போடப்பட்ட போதிலும் இவ்வீட்டுத்திட்ட பிரதேசத்திற்கு நீர்குழாய் 
பதிக்கப்படாதுள்ளதாக பிரதேச மக்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து நேற்று(9)அவர் கிழக்கு மாகாண உதவி பொது 

முகாமையாளர் எம்.எம்.நசீல் சகிதம் குறித்த வீட்டுத்திட்டத்திற்கு சென்று பார்வையிட்டதுடன், வீட்டுதிட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு துரிதமாக குடிநீரை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தினார்.

இதன்போது மத்தியமுகாம் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறுப்பதிகாரி ஏ.எம்.ஏ.நாஸரிடம் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக குடிநீரை வழங்குவதற்கான சாத்தியமான நடவடிக்கைகளை 

மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் ஆலோசனை வழங்கினார்.

இவ்விஜயத்தின் போது நாவிதன்வெளி பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் ஏ.சீ.நஸார் ஹாஜி, சவளக்கடை பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் தலைவர் ஏ.அஸீஸ், சவளக்கடை பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் செயலாளர் ஏ.எல்.ஜலீல், சவளக்கடை பிரதேச 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் பொருளாளர் எம்.பீ.நபாஸ், பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் இணைந்திருந்தனர்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog