Breaking

LightBlog

Sunday, 9 April 2017

கணிதத்தை கண்டு நடுங்கியவனுக்கு தனது ஊக்குவிப்பால் தட்டிக்கொடுத்த ஆசிரியர்.


தனது 12 வருடகால சேவைக்காலத்தில் 40 இற்க்கும் மேற்பட்ட பொறியியலாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எமது பாடசாலையிலிருந்து உருவானதுக்கு பெரும் பங்கு வகித்தவர்.

2007 O/L பிரிவுக்கு தரமான 2 வருடகால வழிகாட்டலுடன் கணிதப் பாடத்தின் சித்தி வீதத்தை 95 சதவீதத்திற்க்கு உயர்த்தியதன் மூலம் அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு தூணாக விளங்குபவர்.

கணிதத்தை வெறுத்தவனுக்கு அதனை முதல் விருப்புப் பாடமாக மாற்றியவர்.

கணிதத்தை கண்டு நடுங்கியவனுக்கு தனது ஆலோசனையினாலும் ஊக்குவிப்பாலும் தட்டிக்கொடுத்தவர்.

சந்தேகம் என்று கேட்டவனுக்கு முற்றிலும் விளங்கும் வரை சற்றும் தளராமல் விளக்கி வைத்தவர்.

பிரம்பென்றொன்றை கையிலெடுக்காமல் தன் மீதுள்ள மதிப்பாலும் மரியாதையாலும் மாணவர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர்.

பெரும் அர்ப்பணிப்புக்குச் சொந்தக்காரர்.

ஒரு நாளேனும் வீணாக விடுமுறை எடுக்காதவர்.

Free பாடவேளை என்றவொன்றையே மாணவர்கள் அனுபவிக்காமல் பார்த்துக்கொண்டவர்.

கஷ்டம் என்று வந்தவனை அரவணைத்தவர்.

நேர்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டானவர்.

சுயநலமற்ற உயர்ந்த மனிதர்.

கல்லம் கபடமற்ற சிரிப்புக்குச் சொந்தக்காரர்.

இவ்வனைத்து புகழுக்கும் சொந்தக்காரர் தான் உயர்தர இணைந்த கணித ஆசான் திரு. கேசவன் அவர்கள்.

அவரின் சேவையை பாராட்டி 2017 மற்றும் 2018 உயர்தர விஞ்ஞானப்பிரிவு மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை farewell party ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

வைபவத்தன்று பாடசாலை அதிபர் உப அதிபர்கள் உட்பட சகல ஆசிரியர்களுக்கும் அழைப்பை விடுத்திருந்ததுடன் திரு கேசவன் ஆசிரியர் அவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி 

வைத்தமையுடன் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தனர். மேலும் வைபவத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய போசனமும் வழங்கப்பட்டது முக்கிய அம்சமாகும்.

தங்களைப்போன்ற ஒரு ஆசான் எமக்கு இனி கிடைப்பாரா என்பது ஒரு கேள்விக்குறி தான்.

எங்களின் இறுதி மூச்சிருக்கும் வரை நீங்கள் எப்போதும் எங்கள் இதயத்தில் உயர்ந்த இடத்தில் தான் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்வதோடு உங்களின் எதிர்காலம் ஔிமயமாக இருக்க வாழ்த்துகிறோம் சேர்.

You are one of the best teachers who have met in our life.
We all really really love you & miss u very badly sir.
Thank you 
Thank you a lot.
Hats off sir.






எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog