Breaking

LightBlog

Sunday, 2 April 2017

அம்பாறையில் 40 ஆயிரம் ஏக்கரில் சிறுபோகச் செய்கை....!


-எம்.எஸ்.எம்.ஹனீபா

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கை சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்படவுள்ளது என  மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எஸ்.ஏ.கலீஸ், இன்று (2) தெரிவித்தார்.

கடந்த வருடம் அம்பாறையில் 95 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது நிலவும் வரட்சி காரணமாக 40 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்வதற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

சில பிரதேசங்களில் நெற்செய்கையுடன் உப உணவுப் பயிர்ச் செய்கையும் சில பிரதேசங்களில் உப உணவுப் பயிர்ச் செய்கை  மாத்திரம் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.

2017ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கைக்காக விவசாயிகளை அறிவுறுத்தும் கூட்டம் வலய ரீதியாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog