Breaking

LightBlog

Friday, 31 March 2017

MPCS வீதிக்கான குடிநீர் இணைப்புக்கான வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கள் அமைச்சருமான கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதியொதுக்கீட்டிலிருந்து கல்குடாத் தொகுதி மக்களின் நீண்ட காலத் தேவையான சுத்தமான குடிநீரின் தேவையைப் பூர்த்து 

செய்து கொடுக்கும் அடுத்த கட்டமாக MPCS வீதிக்கான குடிநீர் இணைப்புக்கான வேலைகள் 2017.03.30ஆந்திகதி-வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆகியோர் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எச்.எம். இஸ்மாயில், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட், கோறளைப்பற்று மேற்கு, 

கோறளைப்பற்று, கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைகளின் செயலாளர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி மத்திய குழுவின் செயலாளர். எம்.எம். பஸீர் மற்றும் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog