Breaking

LightBlog

Sunday, 4 December 2016

அல்- முனிறா பெண்கள் உயர் கல்லூரி தேசிய ரீதியில் சாதனைகளை பெற்றுள்ளமை எமக்கு பெருமை தருகிறது.


by-எம்.ஜே. எம். சஜீத்

கிழக்கு மாகாண எதிரக்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை

அட்டாளைச்சேனை பிரதேச பெண்களின் கல்வியில் முழு மூச்சாக செயற்படும் அல்- முனீறா பெண்கள் உயர் கல்லூரி தேசிய ரீதியிலும், மாகாண, மாவட்ட மட்டத்திலும் பல சாதனைகளைப் படைத்து நிற்பதனைக் கண்டு நாம் எல்லோரும் பெருமைப்படவேண்டும் என அட்டாளைச்சேனை 

அல் - முனிறா பெண்கள் உயர் கல்லூரியில் நடைபெற்ற மின்னும் தாரகைகள் என்ற நிகழ்வு அதிபர் எம்.எச்.றஸ்மி தலைமையில் நடைபெற்ற போது கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

எமக்கு அரசியல் அதிகாரம் கிடைத்த போதெல்லாம் நமது கல்வித்துறைக்கு  முடிந்தளவு பணிபுரிய இறைவன் சந்தர்ப்பத்தைத்  தந்தான். அதனால் நாம் அன்று நமது கல்வித்துறைகளை பாதுகாத்து காவலாக இருந்து செயற்பட்டதனால் இன்று நமது கல்லூரிகள் அதன் பலன்களை அறுவடை செய்து வருகின்றன. 

எனவே எமது கல்வித் துறைக்கு அரசியல் அதிகாரம் உள்ளோர்கள், கல்வி அதிகாரிகள் இணைந்து செயற்பட்டு நல்ல பணிகளைப் புரிய வேண்டும். கல்வி துறைக்கு புரிகின்ற பணிக்கு இறைவனின் நன்மைகள் கிடைக்கும். பெண்கள் கல்லூரிக்கு நாம் முக்கியதுவம் கொடுப்பதனால் அதன் ஊடாக நமது சமூகமே முன்னேற்றம் அடையும். இக்கல்லூரியில் கல்வி கற்று  எதிர்காலத்தில்

 பல துறைகளில் உயர் நிலையை அடைய இருக்கும் மாணவிகள் உங்களுடைய வாழ் நாளில் இறைவனுக்கு நன்றி செலுத்தி பெற்றோர்களை கௌரவிப்பவர்களாகவும், பெற்றோர்களுக்காக பிரார்த்தனை செய்பவர்களாகவும் செயற்படுவதுடன் தங்களின் வாழ்நாட்களையே தியாகம் செய்து அர்ப்பணிப்பு செய்த அதிபர், ஆசிரியர்களை மறந்துவிடவும் வேண்டாம். அவர்களுக்கு எப்போதும் 

கௌரவம் கொடுத்து செயல்பட வேண்டும் உங்களுடைய வாழ்க்கையில் உயர் நிலைக்குச் செல்லும் போது நல்ல சிந்தனைகள் விதைக்கப்பட்டு நமது மார்க்க விழுமியங்களையும் பாதுகாத்து செயற்படவேண்டும். அப்போதுதான் செல்லும் இடம் எல்லாம் சிறப்பாக செயற்பட சந்தர்ப்பம் கிடைக்கும்.

உங்களின் வாழ்க்கையில் பரீட்சைகளில் சித்தியடையவில்லை அல்லது எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம் இறைவனுக்கு நன்றி உடையவர்களாக இருங்கள் நமக்கு வாழ்க்கையில் பல பிரச்சினைகள் நிகழும் போது அதற்கான மாற்றுத்திட்டத்தினை இறைவன் வைத்திருப்பான். 

பொறுமை காக்கும் போது எல்லாம் சிறந்ததாக நடைபெறும் என்ற நம்பிக்கையுடன் செயற்படுங்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருந்து மக்களுக்கு நன்மை கிடைக்கும் விடயங்களில் கவனம் செலுத்துதல் வேண்டும்.

இக்கல்லூரியின் ஆரம்ப வளர்ச்சிக்கு வித்திட்டு இக்கல்லூரியின் காவலனாக செயற்பட்டு ஒய்வு பெற்ற முன்னாள் அதிபர் கே.எம்.சுபையிர், எம்.ஐ. அப்துல் ஸலாம் ஆகியோர்களை 

இச்சந்தர்பத்தில் நினைவு கூறுவதுடன் புதிய அதிபர் தலைமையை பாரம் எடுத்து சிறப்பாக செயல்பட்டு வரும் அதிபர் றஸ்மி அவர்களுக்கு மக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். 
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog