by-எம்.ஜே.எம்.சஜீத்
அட்டாளைச்சேனை இக்றாஃ வித்தியாலயத்தில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டுமுகமாக ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (4) பாடசாலை அதிபர் ஏ.எல் யாசீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை நட்சத்திர அதிதியாகவும், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம் காசீம் கெளரவ அதிதியாகவும், கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ கஸ்ஸாலி விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும், கற்பித்த ஆசிரியர்கள் ஏ.எல் நழிமுத்தீன் மற்றும் சுஹையிர் ஆகியோரும் பாடசாலை அதிபர் ஆசிரியர்களும் அதிதிகளினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like




No comments:
Post a Comment