கண்டியில் உள்ள பிரபல மகளிர் கல்லூரி அதிபர் பாடசாலையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.
மாணவர்களுக்கு சீருடைக்கான வவுச்சர்கள் வழங்குவதற்கு பதிலாக பாடசாலை சீருடை வழங்கிய குற்றத்திற்காகவே இவர் பாடசாலையை விட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால்,வழங்கப்பட்டுள்ள வவுச்சரை வழங்கமால் மற்றுமொரு இடத்தில் பாடசாலை சீருடைகளை கொள்வனவு செய்துள்ளார் என கல்வி அமைச்சின் செயலாளர் குறித்த பாடசாலை அதிபரை இடைநிறுத்தியுள்ளார்.
மேலும், கல்வி அமைச்சினால் வழங்கப்படும் வவுச்சர்களை பாடசாலை மாணவர்களுக்கு வழங்காத பாடசாலை அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன் எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment