Breaking

LightBlog

Sunday, 11 December 2016

சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தவதை ஜம்மியதுல் உலமா லிஸ்ஸபாபில் முத்தஹிதா அமைப்பு வரவேற்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் பெண்களின் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அல்-மர்ஜான் பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு சம்மாந்துறை தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹஸனலி அமைச்சு மட்டத்தில் எடுத்த நடவடிக்கைகளையும் முயற்சிகளையும் மேற்படி எமது அமைப்பு பாராட்டுகின்றது.

சம்மாந்துறை கல்வி வலயமானது சுமார் 71 பாடசாலைகள் உள்ளடக்கிய நிலையில், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயம் மாத்திரமே தேசிய பாடசாலையாக முன்னால் ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் மர்ஹும் எம்.ஏ. அப்துல் மஜீட் MP அவர்களின் முயற்சியினால் 13-05-1994 ஆம் ஆண்டு தரமுயர்த்தப்பட்டது. தற்போது இப்பாடசாலையில் 3800க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

எனினும், 1950ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அர்மர்ஜான் மகளிர் கல்லூரியானது பல வளப்பற்றாக்குறையையும் கொண்டு காணப்படுவதோடு இப்பாடசாலையை சுற்றியுள்ள பொற்றோர்களில் பெரும்பாலனோர் வசதி குறைந்தவர்களாக உள்ளனர். அத்துடன் இப்பிரதேசத்தின் மாணவர்கள் ஆற்றலும் திறமையும் மிக்கவர்களாக இருப்பதனையும் எடுத்துக்காட்டலாம். இதனை நிவர்த்திப்பதாக  மத்திய அரசாங்கத்தின் கீழ் இப்பாடசாலையை கொண்டுவருவதன் மூலம் பாடசாலை வளங்களை பெருகவும் இப்பகுதி மாணவர்கள் திறமைமிக்கவர்களாக வருவார்கள் எனவும் எமது அமைப்பு நம்புகிறது.

இந்த முயற்சி வெற்றியடைய சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் சக உறுப்பினர்களும் ஊர் பொதுமக்களும் தமது பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் தருவார்கள் என நம்புவதோடு இவ்வாறான பலமுயற்சிகளுக்கும் பக்கபலமாகவும் உறுதுணையாகவும் அனைவரும் அமைவார்கள் என எமது அமைப்பு நம்பிக்கை கொள்கிறது.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog