Breaking

LightBlog

Monday, 5 December 2016

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று நல்லடக்கம்...! மறக்க முடியுமா? டிசம்பர் 6 ஐ.


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து  தமிழகம் சோகத்தில் மூழ்கியுள்ளது. 

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சமாதி அருகே இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அவரது உடல் இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து தற்போது தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுள்ளார். 

தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. 

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அவரது உடல் போயஸ் கார்டனுக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்கு சம்பிராதயங்கள் முடிந்ததையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி மஹாலில் வைக்கப்பட்டுள்ளது. ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட ஜெயலலிதா உடல் மீது படை வீரர்கள் மூவர்ண தேசியக் கொடியை போர்த்தி 

அஞ்சலி செலுத்தினர். அங்கு உள்ள அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கு கூடியுள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் மக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சமாதி அருகே இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog