Breaking

LightBlog

Thursday, 8 December 2016

வாகன வீதி ஒழுங்கு விதிமுறைகளை மீறுவோர்மீது 25000 தண்டப்பணம், எந்தவித மாற்றமும் இல்லை..


வாகன வீதி ஒழுங்கு விதிமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வாகன வீதி ஒழுங்கு விதிமுறைகளை மீறுவோர்மீது 25000 தண்டப்பணம் தொடர்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்;டினார்.

இது தொடர்பில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் 7குற்றங்கள் தொடர்பிலான தண்டப்பணம் குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்படும். 25000 ரூபா தண்டப்பணம் தொடர்பாக 

தனியார் துறை பஸ் உரிமையாளர்கள் சேவைப்பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். உண்மையில் இந்த பகிஷ்கரிப்பின் பின்னணியில் இடம்பெற்றது என்ன?

இந்த தண்டப்பணம் விதிப்பதற்கான அறிவிப்பு வந்ததை தொடர்ந்து நாளாந்தம் வீதி விபத்துக்களால் இறப்போரின் எண்ணிக்கை 8 இலிருந்து 2ஆக குறைந்துள்ளது. பொதுமக்கள் இந்த தண்டப்பண விதிமுறையை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

வேலைப்பகிஷ்கரிப்பை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசாங்கம் இந்த நிலையிலிருந்து மாறக்கூடாது என்பதே பொதுமக்களின் நிலைப்பாடாகும்.

தனியார் பஸ் சேவை பணிப்பகிஷ்கரிப்பின் போது 128பேர் தாக்கப்பட்டுள்ளனர். 125 பேர் கைதுசெய்யப்படவேண்டும். ஆனால் பொலிசாரினால் இந்த கைதுகளை மேற்கொள்ள முடியவில்லை . 50 பேர் மாத்திரமே கைதுசெய்யப்பட்டனர். பொலிசார் 

பொதுமக்களுடன் ஒன்றிணைந்து இருக்கவில்லை என்று இதன் மூலம் தெரியவருகின்றது . வன்முறையில் ஈடுபடுபவர்களின் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் . குடிபோதையில் வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்வதில் அரசாங்கம் தெளிவான முடிவில் இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

வேலைப் பகிஷ்கரிப்பின் பின்னணியில் அரசியல் நோக்கமும் இடம்பெற்றுள்ளது. பொதுமக்களுக்கு நன்மை தரும் இந்த சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு பொதுக்கள் விரும்பவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
by-news.lk
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog