Breaking

LightBlog

Sunday, 11 December 2016

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'வர்தா' புயல், மணிக்கு 20 கி.மீ. வேகத்தில்...


வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'வர்தா' புயல், மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து தற்போது நெல்லூரில் இருந்து 880 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. 

தற்போது 'வர்தா' புயல் தீவிரமடைந்துள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் மேற்கு வடமேற்கு நோக்கி நகரும் என்றும் அறிவிக்கப்ப்டுள்ளது.

'வர்தா' புயல் தற்போது தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் லேசான மழையும், தென் கடலோர ஆந்திரப் பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு நிலைய பணிப்பாளர்  ஸ்டெல்லா தெரிவித்துள்ளார்.

12-ம் தேதி மாலை நெல்லூர்- மச்சிலிப்பட்டினம் இடையே 'வர்தா' புயல் கரையைக் கடக்கும். இதன் காரணமாக தென் கடலோர ஆந்திரப் பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 12-ம் தேதிக்குப் பிறகு 'வர்தா' புயல் வலுவிழக்கும். புயல் காரணமாக தமிழக மீனவர்கள் ஆந்திரக் கடலோரப் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்'' என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog