Breaking

LightBlog

Monday, 21 November 2016

தொண்டை வலி நீங்க சில ரிப்ஸ்....


இருமல், தொண்டை வலி இருப்பவர்கள், சிறிதளவு வசம்பையும்,    மிளகையும் மென்று, தின்னலாம்.

பால் சேர்க்காமல் டீயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு விட்டு குடித்தால் தொண்டை வலி நீங்கும்.

உப்பு நீரால் கொப்பளிப்பது நல்லது.

சூடான நீராகாரங்களைப் பருகுவதும் நல்ல பலனைத் தரும்.

நீராவி பிடிப்பது (தொண்டையில் படும்படி) பிடிக்கலாம்.

சுண்ணாம்பை ( வெற்றிலை போட உபயோகிக்கும் சுண்ணாம்பு ) எடுத்து கொஞ்சம் தண்ணீரில் கரைத்துத் தொண்டையில், அதாவது கழுத்துப் பகுதியில் தடவுங்கள். கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்.

சிறிது தண்ணீரை மிதமான சூட்டில் வைத்து கொண்டு அதில் சிறிது உப்பு சேர்த்து, தொண்டை பகுதியில் வைத்து, கரகர என்று செய்தல் வேண்டும்
வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது வலி போகும் என்று சொல்வார்கள்.
கற்பூரவல்லி இலை சாறு எடுத்து கற்கண்டு சேர்த்து காலை, மாலை குடிக்க தொண்டை வலி குறையும்.

துளசி இலைகள் போடப்பட்ட தண்ணீரை தினமும் குடித்து வந்தால் தொண்டையில் புண் வராது.

தண்ணீரைக் காய்ச்சும்போது, ஒரு பிடி சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து, சிறிது நேரம் கழித்து அருந்தலாம். 

தொண்டைக்கு   இதமாக இருக்கும்.

இரவு படுக்கும்போது, பாலில் மஞ்சள்தூள், தேன், பொடித்த மிளகு போட்டு அருந்த, தொண்டை வலி நீங்கி, இதமாக இருக்கும்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog