Breaking

LightBlog

Saturday, 12 November 2016

மனித வரலாற்றின் பாதையை மாற்றிய இளையவர்கள்...!


கலாநிதி ஜாஸீர் அவ்தா வரலாற்றில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ﷺ அவர்களின் தோழர்களின் வயது பற்றி வாசிக்கும்போது ஆச்சரியத்தை காண்போம். அவர்கள் இஸ்லாத்தை தெரிவு செய்து அதை தங்களின் புஜங்களில் சுமந்து அன்றைய பிரதான தலைவர்களுக்கும், ஸ்திரமான ஆட்சிக்கும் மாற்றமாக முன்நகர்ந்து சென்றார்கள்.

 அவர்கள் தலைவர்களினதும், குடும்பத்தினதும், சமூகத்தினதும் கொடும்செயல்களுக்கு முகம் கொடுத்தார்கள், அத்தகையவர்கள் ஐம்பது அல்லது அறுபது வயதுடையவர்களாக அல்லது அதற்கு மேட்பட்ட வயதுடையவர்களாக இருக்கவில்லை, அரிதானவர்களை தவிர அவர்கள் கிட்டத்தட்ட எல்லோருமே இளைஞர்களாக இருந்தார்கள், சிலவேளையில் அவர்கள் சிறுவர்களாகவும் இருந்தார்கள்.

இஸ்லாத்தினுல் நுழையும்போது சில சஹாபாக்களின் வயதுகளை வரலாற்றில் இதற்கு உதாரணமாக பார்க்கமுடியும் அலி இப்னு அபூத்தாலிப் 10 வயது , தல்ஹா இப்னு அபீத்துல்லாஹ் மற்றும் அல் அக்கரம் இப்னு அபீ அல் அக்கரம் 12 வயது . அப்துல்லாஹ் இப்னு மஸூத் 14 வயது , அஸ்மா பிந்தி அபிபக்கர் மற்றும் ஸயித் இப்னு அபிவக்காஸ் 17 வயது , 

ஜஹ்பர் இப்னு அபி தாலிப் மற்றும் சுபைர் இப்னு அவ்வாம் 18 வயது , உஸ்மான் இப்னு அfப்பான், ஸுஹைப் அல் ரூமி , ஸயித் இப்னு ஸாபித் மற்றும் ஹப்பாப் இப்னு அல் அரத் வயது 20, பாத்திமா பிந்து அல்கத்தாப் , முஸ்அப் இப்னு உமைர் மற்றும் அல்மிக்தாத் இப்னு அல்அஸத் 24 வயது ,உமர் இப்னு அல்கத்தாப், அஸ்மா பிந்து உமைஸ் மற்றும் அபூ அபீதா இப்னு அல் ஜராஹ் 26 வயது ,பிலால் இப்னு ரவாஹ் மற்றும் அம்மார் இப்னு யாஸீர் 30 வயது.

இத்தகைய இளைஞர், யுவதிகள் ஒரு சில தசாப்தங்களில் மனித வரலாற்றின் ஓட்டப்பாதையை மாற்றினார்கள். அவர்கள் உலகத்துக்கு ஏகத்துவம், நாகரீகம், உரிமைகள் மற்றும் நன்மையை விளைவித்தல் ஆகியவற்றின் தூதை சுமந்துவந்தார்கள், அவர்கள் சத்தியப் பாதையில் தங்கள் உயிர்களையும், பொருட்களையும் அர்ப்பணித்தார்கள், 

அவர்கள் நீதியின் பாதையில் மேற்கினதும், கிழக்கினதும் ஆட்சியாளர்களுடனும், அவர்களின் இராணுவ இயந்திரத்துடனும் போரிட்டார்கள் இது முன்னோடிகள் மற்றும் சீர்திருத்தவாதிகள் இடத்தில் அல்லாஹ்வின் சுன்னத்தாகும் (வழிமுறையாகும்) இது இஸ்லாத்தின் காலத்துக்குரியது மட்டுமல்ல எல்லாக் காலத்துக்கும் எல்லா நபிமார்களுக்கும் உரியதாகும்.

(கலாநிதி ஜாஸீர் அவ்தாவின் ”கொடுங்கோல் அமைப்புக்களை உடைத்தல்” என்ற தொடர் ஆக்கத்தில் இருந்து ஒரு சிறுபகுதி.)

தமிழில் : எஸ் .எம் மஸாஹிம் ( இஸ்லாஹி )

by-meelparva
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog