by-ரெ.கிறிஸ்ணகாந்
30 சதவீத குடிநீர் கட்டண அதிகரிப்பு எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரவிருந்த நிலையில் அது நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
குடிநீர்கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவையில் தெரிவித்ததாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை, குடிநீர்கட்டண திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கு மூன்று அமைச்சர்கள் அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 ஆம் திகதி முதல் நீர்கட்டணம் 30 வீதத்தினால் அதிகரிப்பதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்திருந்த போதிலும் அது தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment