Breaking

LightBlog

Saturday, 26 November 2016

நாங்கள் தாக்குதல் நடத்தினால் இந்தியாவால் பல தலைமுறைகளுக்கு மறக்க முடியாது.


நாங்கள் தாக்குதல் நடத்தினால் இந்தியாவால் பல தலைமுறைகளுக்கு மறக்க முடியாது என பாகிஸ்தான் இராணுவத் தளபதி ரஹீல் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உரி இராணுவ முகாமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருந்தே இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.

இதற்கு பதிலடியாக இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியது, இதனை தொடர்ந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய இராணுவ வீரர்களை கொடூரமாக கொன்று வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் கூறுகையில், பாகிஸ்தானில் இந்தியா துல்லியத் தாக்குதல் நடத்தியதாக கூறுவது பொய்.

இந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுக்கும் வல்லமை பாகிஸ்தானுக்கு உண்டு.

அதை இந்தியாவால் பல தலைமுறைகளுக்கு மறக்கமுடியாது, தன்னுடைய தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கும் அளவுக்கு பாகிஸ்தானின் பதிலடி தாக்குதல் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog