Breaking

LightBlog

Friday, 25 November 2016

சம்மாந்துறை செந்நெல்புரம் கிராமத்தில் டெங்கு...05 பேருக்கு எதிராக வழக்கு.


by-எம்.எஸ்.எம்.ஹனீபா 

அம்பாறை, சம்மாந்துறை செந்நெல்புரம் கிராமத்தில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் இடங்களை வைத்திருந்த 05 பேருக்கு  எதிராக எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி எம்.எம்.எம்.சாபிர் தெரிவித்தார். 

சம்மாந்துறை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை செந்நெல் புரம் 01ஆம் பிரிவு மற்றும் 02ஆம் பிரிவுகளில் மேற்கொண்ட பரிசோதனையின்போது டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய வகையில் இடங்களை வைத்திருந்த 05 நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கெதிராக வழங்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog