அமெரிக்காவின் முதல் முஸ்லீம் பெண் நீதிபதியான ஷீலா அப்துஸ் சலாம் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது உடலை அமெரிக்காவின் ஹட்சன் ஆற்றிலிருந்து போலீசார் கண்டெடுத்துள்ளனர். நியூயார்க்கின், ட்ரெயில்பேளசிங் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி
வந்தவர் ஷீலா அப்துஸ் சலாம். கடந்த வாரத்தில் காணாமல் போன இவரை போலீசார் தேடி வந்த நிலையில், புதன்கிழமை மதியம் 1.45 மணியளவில் அவரது உடல் ஹட்சன் ஆற்றில் கரை ஒதுங்கியது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், சலாமின் உடலை மீட்டு பிரேத
பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் நீதிபதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 65 வயதாகும் சலாம், அமெரிக்காவின் முதல் முஸ்லீம் பெண் நீதிபதி மற்றும் கருப்பின நீதிபதி என்ற பெருமைக்கு
சொந்தக்காரர். மேலும் இவர் அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்த தகவல் ஏதும் இல்லை. இந்த சம்பவம் குறித்து நியூயார்க் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment