by-Ansar Cassim
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுடைய கட்டமைப்பினை மறுசீரமைப்புச் செய்யப்படவதுடன், . கட்சியின்
மேல்மட்டத்தினருக்கும், கீழ்மட்ட தொண்டர்களுக்குமிடையே உள்ள இடைவெளியைக் களைய வேண்டும். என்பதே கட்சி எதிர்நோக்கும் தற்போதைய மிக முக்கியமாக பிரச்சினையாகும்.
எதிர்வரும் காலங்களில் அனைவரும் ஒன்றாகப் பயணிக்கின்ற ஒரு புதிய யுகத்திற்கு எல்லோரையும் இட்டுச் செல்கின்ற புதிய உற்சாகம் கட்சிப் போராளிகளுக்கு வரவேண்டும். என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சம்மாந்துறை அபிவிருத்தி மற்றும் கட்சி கட்டமைப்பினை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான கலந்துரையாடல் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பபினர் எம்.ஐ.எம்.மன்சூரின் தலைமையில் நேற்றுமுன்தினம்(09) சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொர்ந்தும் உரையாற்றுகையிலேயே – தற்போதைய நிலவரத்தின்படி அரசியல் அதிகாரங்களில் முஸ்லிம் காங்கிரஸ் அல்லாதவர்கள் அம்பாறை மாவட்டத்தில் கிடையாது. மாவட்டத்தின் அரசியல் அதிகாரத்தினையும் முஸ்லிம் காங்கிரஸ் தனது கைகளில் வைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸின்
அரசியல் பலவீனப்பட்டு விட்டது என்ற பார்வை இன்று பரவலாக ஏற்பட்டு இருக்கிறது. எமது இயக்கத்தை ஒருபோதும் எவராலும் பலவீனப்படுத்த முடியாது.
முஸ்லிம் காங்கிரஸீக்கு எதிராக இருக்கின்ற எதிரணியனருக்கு அரசியல் அதிகாரம் கிடையாது. இப்படியான காலச்சூழல் இதற்கு முன்னர் இருந்தது கிடையாது. அபிவிருத்தியை முழுக்க முழுக்க முஸ்லிம் காங்கிரஸ்தான் செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும் அதிலிருந்து தப்பமுடியாது.
முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்புச் செய்த மண் சம்மாந்துறையாகும். சம்மாந்துறையானது விசித்திரமான பூமியாகும். முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் தன்னுடைய பாசறையில் அரசியல் செய்தவர்களுக்கு மாத்திரம் அவர்களை அலங்கரித்து அழகு பார்க்கவில்லை. நாட்டின் பிரதான இரண்டு
தேசிய கட்சிகளின் அரசியல்வாதிகளையும் அலங்கரித்து அழகு பார்த்தவர்கள் அந்தவகையில் சுதந்திரக்கட்சியிலிருந்த மர்ஹீம் யூ.எல்.எம்.முகைதீனை பாராளுமன்ற உறுப்பினராகவும், பிரதியமைச்சராகவும், ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்த
எம்.ஏ.எம்.நௌஷாதை பாராளுமன்ற உறுப்பிராகவும் நாங்கள் அலங்கரித்து அழகு பார்த்தவர்கள் அந்த கண்ணியமும், கௌரவமும் சம்மாந்துறை தவிர வேறுஎந்த மண்ணுக்கும் கிடையாது.
முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்தாலும் அதனை எதிர்க்கின்ற எதிரணியினர் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதனைப் பற்றி அலட்டிக் கொள்ளத்தேவையில்லை. இந்த இயக்கத்தை பலவீனப்படுத்தும் முயர்ச்சியில் இன்று பல்வேறு சக்திகள்
களமிறங்கியுள்ளனர். இவ்வாறான சக்திகளுக்கு முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளை கையில் எடுப்பதற்கு இடம்கொடுக்க முடியாது. இந்த கட்சியனுடைய கட்டமைப்பினை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
எனவே, எமது கட்சியினை கிராமங்கள் ரீதியான கட்சி கட்டமைப்பினை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்பதோடு, கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து அனைவரும் ஒன்றாகப் பயணிக்கின்ற ஒரு புதிய யுகத்திற்கு எல்லோரையும் இட்டுச்
செல்கின்ற புதிய உற்சாகம் கட்சிப் போராளிகளுக்கு வரவேண்டும்.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹீர், கட்சியின் செயலாளர் மன்சூர் ஏ. காதிர்,
சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.முஸ்தபா, ஐ.எல்.எம்.மஜீத், கட்சிய்ன் மத்தீய குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டானர்கள்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like






No comments:
Post a Comment