சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தில் முதல் தடவையாக இரு மாணவர்கள் அதி திறமைச் சித்தியாக 8A 1C பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெள்ளத் தம்பி றஹப் ஹகீம், அப்துல் முஹமட் சிபான் ஆகிய மாணவர்களே இச்சாதனையை நிலைநாட்டியுள்ளனர். அது மாத்திரமன்றி அதிகமான மாணவர்கள் திறமையான சித்தி பெற்று உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தமிழ் மொழி, ஆங்கிம், விஞ்ஞானம், கணிதம், வரலாறு, வணிகக் கல்வி, தமிழ் இலக்கிய நயம், ICT, விவசாயம் போன்ற பாடங்களில் சித்தி வீதம் அதிகரித்துள்ளதோடு பாடசாலையின் மொத்த சித்தித் சத வீதமும் 31.99 வீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
அது மட்டுமல்லாது பஸீல் முஹம்மட் பஸ்லம் என்ற மாணவன் 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் தேசிய ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமையும், அம்சார் முஹம்மட் இன்ஸாப் எனும் மாணவன் தேசிய ரீதியாக இடம்பெற்ற அறிவிப்பாளர் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத் தக்கது.
இச் சிறப்பான சித்திகளையும், முன்னேற்றங்களையும் மாணவர்கள் பெற பக்கபலமாக பாடசாலை அதிபர் ஏ.எல்.அப்துல் மஜீட், பிரதி அதிபர், உப அதிபர், ஆசிரிய மற்றும் ஆசிரியைப் பெருந்தகைகள், கல்வி ஆலோசகர்கள் போன்றோரின் பங்களிப்புக்களும் பெரும் உறுதுனையாகவிருந்தது.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like





No comments:
Post a Comment