Breaking

LightBlog

Tuesday, 11 April 2017

மேலதிக பணம் அறவிடும் பஸ் வண்டிகளின் அனுமதி பத்திரம் ரத்து...!


பண்டிகைக் காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்திற்கு மேலதிகமாக பணம் அறவிடும் பஸ் வண்டிகளின் பயண அனுமதி பத்திரம் தடைசெய்யப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த பஸ் வண்டிகளின் பயண அனுமதி மூன்று மாதங்களுக்கு தடை செய்யப்படும் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நீண்ட தூர பயணங்களுக்கு மட்டும் மாகாண பயணிகள் அதிகார சபையினால் விசேட கட்டணங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது.

குறித்த பண்டிகைக் காலங்களில் பஸ் வண்டிகளில் அதிகமாக பணம் அறவிடப்படுதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் 1955 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் என்று தேசியபோக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
by-news.lk

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB-PAGEயை லைக்  செய்யவும்
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog