பாடசாலை மாணவர்களது சீருடையில் மாற்றத்தை ஏற்படுத்த அவதானம் செலுத்தப்படுவதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு தற்போது வெள்ளை நிற சீருடை வழங்கப்படுகிறது. இதற்கு பதிலாக மாற்று நிற சீருடை வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்படுவதாகவும், இதன் ஊடாக மாணவர்களின் வினைத்திறன் அதிகரிக்கும் என்று எதிபார்க்கப்படுவதாகவும் கல்வியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய நான்கு அல்லது ஐந்து நிற சீருடைகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும், இதில் தமக்கு தேவையான நிறத்தை பாடசாலைகள் தெரிவு செய்து கொள்ள முடியும் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment