Breaking

LightBlog

Thursday, 30 March 2017

மறிச்சுக்கட்டி மற்றும் முசலி மக்களின் துயரம் துடைப்பது யார்?


ABDUL OFFAR MUHARRIS
பொதுஜன பெரமுன முஸ்லிம் அமைப்பு

வடக்கு முஸ்லிம் மக்களின் வயிறுகளில் நெருப்பை வைத்து விட்டு அமைதியாக இருக்கும் நல்லாட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருக்கும் நிலையில் இந்த வனப் பிரகடனப்படுத்தல் பின்னணியில் செயற்படும் அந்த அமுக்க குழுக்கள் யார்?

என்பது வெளிவர ஆரம்பித்திருக்கிறது.தங்களது தாய் பூமிகளை சூறையாடி வனப்பிரதேசமாக பிரகடனப்படுத்தி இருக்கும் இந்த நல்லாட்சியானது முஸ்லிம் மக்கள் மத்தியில் வெறுப்பு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.நல்லாட்சி பங்காளர்களாக இருக்கும் 

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நல்லாட்சி எடுக்கும் முடிவுகள் மீண்டும் மகிந்த ஆட்சியை எதிர்பார்க்க தூண்டி இருக்கிறது.

யுத்தத்தை அழித்து வடக்கு மக்களை மீள் குடியமர்த்தியதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தவிர வேறு யாரும் இல்லை எனக் கூறலாம்.கடந்த ஆட்சிக்காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ மீள் குடியமர்த்த எடுத்த நடவடிக்கைகளை முறியடிப்பு 

செய்தவர்களில் பெரும் பங்கு தாரராக இருப்பவர் மன்னார் மாவட்ட ஆயர் கெளரவ இராயப்பு ஜோசப் ஆகும்.மஹிந்த முஸ்லிம் மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு குடியமர்த்த முயற்சிகள் 

எடுக்கிறார் எனும் செய்தியை கேள்வியுற்று உடனடியாக பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசாரா தேரருடன் தொடர்பு கொண்டு அவர்களை வடக்கிற்கு அழைத்து தங்குவதற்கான இடவசதியும் செய்து கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்துமாறு தூண்டி விட்டார்.

உண்மை தன்மைகளை புரிந்து கொள்ளாத முஸ்லிம் சமூகம் முன்னாள் ஜனாதிபதி மீது குற்றம் சுமத்தியது.ஆனால் அத்தனை முன்னெடுப்புகளையும் செய்து ஆர்ப்பாட்டத்தை செய்ய வைத்தவர் கெளரவ இராயப்பு ஜோசப் என்பது முஸ்லிம் அரசியல்வாதிகள் அறிந்திருந்தும் அவர்கள் வாய்மூடி ஊமையர்களாகவே 

இருந்தனர்.வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தியவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பதை அம்மக்கள் மறுப்பதிற்கில்லை.வடக்கு விஜயங்களின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீள் குடியேற்றம் பற்றியே அதிகம் பேசி இருக்கிறார்.

மறிச்சுக்கட்டி மற்றும் முசலி பிரதேச மக்களால் செய்யப்படும் ஆர்ப்பாட்டங்கள் சில வேளைகளில் உப்புசப்பற்றதாக போய்விடும்.மறிச்சுக்கட்டி மக்கள் எதிர் நோக்கி இருக்கும் இப் பிரச்சினைக்கான தீர்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த 

ராஜபக்ஷவிடம் மாத்திரமே இருக்கிறது.வடக்கு மக்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளை எதிர்பார்த்திருப்பதை கைவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தரா ராஜபக்ஷ வை நாடுமிடத்து அதற்கான தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும்.பொதுஜன பெரமுன முஸ்லிம் அமைப்பினர் வில்பத்து சம்பந்தமாக நடக்கும் 

பிரச்சினைகளுக்கான தீர்வு திட்டம் பற்றி முன்னாள் ஜனாதிபதியிடம் வினவிய போது அவர் கூறிய கருத்து பிவருமாறு அமைந்திருந்தது.

"மறிச்சுக்கட்டி மற்றும் முசலி பிரதேசமக்கள் எதிர் நோக்கி இருக்கும் காணி பிரச்சினைக்கு என்னால் தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும்.ஆனால் நான் தானாக அவ்விடத்துக்கு செல்வதால் மக்கள் வேறு வகையான கட்டுக் கதைகளை கூற ஆரம்பித்து 

விடுவார்கள்.எனவே வில்பத்தை சூழ உள்ள மக்கள் குறித்த விடயம் சம்பந்தமாக என்னிடம் உதவியை நாடினால் நேரடியாக களத்துக்கு சென்று இதற்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும்.என பொதுஜன பெரமுன முஸ்லிம் அமைப்பிடம் உறுதிமொழி அளித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறிச்சுக்கட்டி மற்றும் முசலி பிரதேச மக்களின் பிரச்சினைக்கு தன்னை அர்பணிக்க தயார் படுத்தி இருக்கும் போது இன்னும் ஏன் அந்த மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.இந்த பிரச்சினைக்கான தீர்வு முன்னாள் 

ஜனாதிபதியிடம் இருக்கிறது. எனவே மறிச்சுக்கட்டி மக்கள் காலம் தாழ்த்தாமல் மஹிந்தவுடடன் கைகோர்த்து சாதகமான சூழ்நிலையை உருவாக்க முன்வர வேண்டும்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog