அண்மையில் இந்தியாவின் பஞ்சாப், உத்தர பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான
சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இவற்றுள் இந்தியாவின் மிகப் பெரும் மாநிலமாகவும் சனத்தொகையில் அதிகம் கொண்ட குட்டி இந்தியா என வர்ணிக்கப்படும் உத்தர பிரதேசத்தில் மொத்த 403 ஆசனங்களில் 324 ஆசனங்களைக்
கைப்பற்றி பா.ஜ.க. பாரிய வெற்றியை ஈட்டியுள்ளது. இனவாத ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரான யோகி ஆதியானந்த் உ.பி.யின் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் படுகொலை உட்பட ஏராளம் கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்
என்பது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைக் கேள்விக்குட்படுத்துவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
முஸ்லிம்களும் கணிசமான தொகையினர் காணப்படும் உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. மிகுந்த அரசியல் சாமர்த்தியத்துடன் செயல்பட்டுள்ளது. மதவாதக் கோஷத்தை மறைத்து சாதியைத் தூக்கிப் பிடித்து முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து வாக்குகளும் பா.ஜ.க.வுக்கே என்ற கோஷத்தை உயர்த்தி வெற்றிபெற்றுள்ளது.
குறிப்பாக சுமார் 65% விடவும் அதிகமான தொகை முஸ்லிம்கள் வாழும் தேவ்பந்த் தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமாக உ.பி. சட்டசபையில் 65 முஸ்லிம் உறுப்பினர்களைக் கொண்டிருந்தது தற்போது வெறும் 25 ஆகக் குறைவடைந்துள்ளது.
ஏனைய மாநிலங்களில் உத்தரகாண்டில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளதுடன் கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூரில் காங்கிரஸ் வென்றுள்ளது. மணிப்பூரில் பொது மக்களின் உரிமைக்காக 16 ஆண்டுகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட பெண்மணி இரோம் ஷர்மிளா சானு தான் போட்டியிட்ட
தொகுதியில் வெறும் 90 வாக்குகள் எடுத்துத் தோல்வியுற்றுள்ளமை மனித உரிமை ஆர்வலர்களிடம் பெரும் அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் அரசியலை விட்டும் விலகுவதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
by-meelparvai
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment