Breaking

LightBlog

Friday, 2 December 2016

சம்மாந்துறையில் கடும் குளிர்...குளிர் காய்ச்சல் ஏற்படக்கூடிய அபாயம்.



by-ஏ.எம்.ஏ.பரீத் 

கிழக்கில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த அடை மழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளிருடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது. இந்தக் காலநிலையானது இரவு வேளைகளில் 24 °c வெப்ப நிலையிலும், பகல் வேளைகளில் 27 °c வெப்ப நிலையிலும் காணப்படுகிறது.

 தற்போது மலையகப் பிரதேசங்களின் காலநிலையை ஒத்ததான காலநிலை இப்பகுதியில் நிலவி வருகின்றது. இது தவிர இரவு வேளைகளில் அதிக குளிருடன் கூடிய காலநிலை நிலவி வருவதனால் இந்தப் பகுதியிலுள்ள சிறுவர்களும், முதியோர்களும் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். 

மேலும், இந்தப் பகுதியில் இவ்வாறான தொடர்ச்சியான காலநிலை நிலவி வருமானால் பெரும்போக நெற்பயிர்ச்செய்கையில் பனி மூட்டங்களின் நோய்த் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் வேளாண்மைகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படுமென விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

 மேலும், குளிர் காய்ச்சல் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.tamilmirror

எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog