by- A.L Riyas , எம்.ஜே.எம்.சஜீத்
முஸ்லிம் சமூகம் இந்த நாட்டிலே எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா பாராளுமன்றத்திலே உணர்வுபூர்வமாக ஆற்றிய உரை அவரின் அரசியல் முதிர்ச்சியையும், தைரியத்தையும்வெ
ளிக்காட்டியுள்ளதுடன், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (9) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த ஆட்சிக் காலத்தின் போது இந்த நாட்டிலே வாழும் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இனவாதக் குழுக்கள் செயற்பட்டது. அப்போது தமிழ், முஸ்லிம் சமூகங்கள் பல்வேறு இழப்புக்களைச் சந்திக்க நேரிட்டது.
அதன்காரணமாகவே சிறுபான்மை மக்கள் இந்த நாட்டிலே நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழவேண்டும் என்பதற்காக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முன்னின்று உழைத்தனர்.
ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இந்த நல்லாட்சியில் சிறுபான்மை சமூகத்திற்கெதிரான குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாதக் குழுக்களின் செயற்பாடுகள்
மேலோங்கிக் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் பெரும்பான்மை சமூகத்திற்கு நல்லதொரு செய்தியை சொல்ல வேண்டும் என்பதற்காக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா பாராளுமன்றத்திலே வரலாற்று முக்கியத்துவமிக்க உரையொன்றினை நிகழ்த்தியிருந்தார்.
முஸ்லிம் சமய அலுவல்கள் மற்றும் தபால் சேவைகள் அமைச்சுக்கான நிதியொதுக்கீடு மீதான விவாதம் நேற்று (8) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் அந்த உரையினை நிகழ்த்தியிருந்தார். முஸ்லிம் தலைமைகள் மௌனம் காத்த
நிலையில் ஒரு தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களினால் ஆற்றப்பட்ட உரை முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் உரையானது ஜனாதிபதி, பிரதமர் பெரும்பான்மையின அமைச்சர்கள் சிலரின் உள்ளங்களையும் ஈர்த்துள்ளது. மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்குரலாக எந்தவொரு முஸ்லிம் அரசியல் தலைமையும் பேசவில்லை அன்று மறைந்த தலைவரின் பாராளுமன்ற உரைகளை ஒத்ததாகவே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் நேற்றைய உரையும் அமைந்திருந்தது.
இஸ்லாத்துக்கு எதிராக இனவாதிகள் மேற்கொண்டு வரும் பிரசாரங்களினால் முஸ்லிம் இளைஞர்கள் மிகுந்த மனவேதனையுடன் இருப்பதாகவும், நல்லாட்சி அரசாங்கம் இவ்வாறான இனவாத செயற்பாடுகளை தடுக்காவிட்டால் முஸ்லிம்
இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை தவிர்க்க முடியாது போகும் எனவும், இனவாத குழுக்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் இந்த நாடு பெரும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும் எனவும் அவர் தனது உரையில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.
இந்த உரையின் பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவை அழைத்துப் பேசியுள்ளனர். சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக செயற்படும் இனவாதக்
குழுக்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் அல்லது அவர்களை கட்டுப்படுத்த வேண்டுமெனவும் அமைச்சர் இதன்போதும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இந்த நாட்டிலே வாழும் முஸ்லிம் சமூகமும், அவர்களின் பள்ளிவாசல்களும் இனவாதக்குழுக்களினால் தாக்கப்பட்ட போது தமிழ், ஊடகங்களிலும், இணையதளங்களிலும் அறிக்கைவிட்ட
முஸ்லிம் அரசியல் தலைமைகள் பாராளுமன்றத்தில் மௌனம் காப்பது கவலையளிப்பதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பிர் சுபையிர் மேலும் தெரிவித்தார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment