Breaking

LightBlog

Tuesday, 13 December 2016

ஹசனலியின் பொறியில் சிக்குண்ட ஹக்கீம்...


ஒருவர் எவ்வளவு தான் அறிவாளியாக இருந்தாலும் ஒரு சில விடயங்களில் அவர் தவறிழைப்பது தவிர்க்க முடியாததொன்றாகும்.அமைச்சர் ஹக்கீம் ஹசனலி மூலம் தனக்கிருந்த பாரிய சவால்களை எதிர்கொள்ள செய்த பல விடயங்கள்அவருக்கு சாதகமாக முடிந்தாலும் தேர்தல் ஆணையாளரிடம் அவரது அரசியலாட்டம் பிழைத்து 

போய்விட்டது.தேர்தல் ஆணையாளர்2016-12-15ம் திகதிக்குள் கட்சியின் செயலாளர் யார் என்ற முடிவை அறிவிக்குமாறு மு.காவிற்கு காலக்கெடு விதித்துள்ளார்.இவ்விடயத்தில் அமைச்சர் ஹக்கீமின் அரசியல் முதிர்ச்சியும்அனுபவமும் சற்று தோற்றுவிட்டது.இந்த தோல்விக்கு ஹசனலியின் அரசியல் 

முதிர்ச்சியும் அனுபவமும் யாப்பு மாற்றத்தின் போது இடம்பெற்ற சில விடயங்களும் பிரதான காரணமாகவுமிருக்கலாம்.அமைச்சர் ஹக்கீமிற்கும் ஹசனலியிற்குமிடையே பல விடயங்களில் முரண்பாடுகள் தோன்றியிருந்தாலும் கடந்த 26வது பேராளர் மாநாட்டை தொடர்ந்தே அது உக்கிர நிலையை அடைந்திருந்தது.

2015-11-07ம் திகதி இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் 26வது பேராளர் மாநாட்டை தொடர்ந்து அமைச்சர் ஹக்கீமிற்கு எதிரான செயற்பாடுகளும் அவரது பல தோல்வி முகங்களும் வெளிப்படலாயின.மு.காவில் உள்ளோரிற்கு  அமைச்சர் ஹக்கீமை எதிர்த்து கேள்வி கேட்கும் துணிவு இதன் பிறகு தான் தோற்றம் 

பெற்றது என்றாலும் தவறில்லை.அமைச்சர் ஹக்கீம் ஹசனலியின் மீது கை வைத்தமையை தொடர்ந்து உறங்கி கிடந்த மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் உயிர் பெற்று எழுந்தார்.கிழக்கின் எழுச்சி என்று கிழக்கு தலைமைத்துவத்தை கோரி ஒரு வகைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.ஹசனலி சார்பு அணியினர் உருவாகினர்.இதுவெல்லாம் அமைச்சர் ஹக்கீமின் 

தலைமைத்துவத்தை குறி வைத்தமை தான் இதன் முக்கிய அம்சமாகும்.இவர்கள் அனைவரும் ஹக்கீமோடு சேர்ந்து பல வருடங்களாக அரசியலுக்கும் அப்பால் நெருங்கிய தொடர்பை கொண்டவர்கள் என்பதால் இவர்களுடன் அமைச்சர் ஹக்கீம் 

மோதுவது அவ்வளவு இலகுவானதல்ல.இவர்களின் தற்போதைய செயற்பாடுகள் மக்களிடையே தாக்கம் செலுத்தியிருப்பதை மறுக்க முடியாது.இதற்கு அமைச்சர் ஹக்கீம் 26வது பேராளர் மாநாட்டில் அனைவரையும் ஏமாற்றி யாப்பை மாற்ற முயற்சி செய்தமை தான் வழி சமைத்துக்கொடுத்திருந்தது.

26வது பேராளர் மாநாட்டில் ஹக்கீமின் விளையாட்டு

கடந்த மு.காவின்26வதுபேராளர் மாநாட்டில் மாற்றப்பட்ட யாப்பிற்கான அங்கீகாரத்தையும் கட்சியின் நிருவாகிகளையும் தேர்ந்தெடுப்பதற்கான உயர்பீடக் கூட்டத்தில் யாப்பு மாற்றங்கள் பற்றி வாசிக்கப்பட்ட போது பொதுச் செயலாளர் தவிர்ந்து ஆறு மேலதிக செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக 

கூறப்பட்டுள்ளது.இதன் போதே இது ஹசனலியின் பதவி குறைக்கும் செயற்பாடுகள் என சில சல சலப்புக்களும் எழுந்துள்ளன.இவ் ஆறு செயலாளர்களில் ஒன்றான உயர் பீட செயலாளராகமன்சூர் ஏ.காதர் நியமிக்கப்பட்டிருந்தார்.இதன் பின்பு இவ் யாப்பு மாற்றம் 

தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதத்தில் உயர் பீட செயலாளரும் கட்சியின் செயலாளரும் என்ற இரு பதவிகள் மன்சூர் ஏ.காதருக்கு குறிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலதிக தேர்தல் 

ஆணையாளர் மொஹமத் ஹசனலியைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியுள்ளார்.ஹசனலி இவ்வாறானதொரு யாப்பு மாற்றம் நிகழவில்லை என்றதோடு தானே மு.காவின் செயலாளரென பதிலளித்துள்ளார்.

ஒரு கட்சியின் செயலாளரை மாற்றும் போது முன்பு இருந்த செயலாளருடன்  முரண்படாதவாறு சுமுகமான மாற்றமிருக்க வேண்டும்.அல்லது அவரை நீக்குவதற்கான தகுந்த காரணங்கள் 

முன் வைக்கப்படல் வேண்டும்.அங்கு ஹசனலியை நீக்குவதற்கான தகுந்த காரணங்கள் இடம்பெறவுமில்லை சுமுகமான மாற்றம் நடைபெறவுமில்லை.ஆறு செயலாளர்கள் 

நியமிக்கப்பட்டிருந்தமையை  தொடர்ந்து கட்சிக்குள் சில சல சலப்புக்கள் தோன்றியுள்ள போதும் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கூட்டறிக்கையில் அது தொடர்பான விடயங்கள் எதனையும் உள்ளடக்காது அமைச்சர் ஹக்கீமின் கையொப்பத்துடன் தேர்தல் ஆணையாளருக்கு 

அனுப்பப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையாளருக்கும் ஒரு கட்சியின் தலைவருக்குமிடையில் எதுவித தொடர்புமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.குறித்த கூட்டறிக்கையில் இது தொடர்பான சர்ச்சைகள் உள்ளடக்கப்பட்டிருந்தால் குறித்த செயலாளர் மாற்றம் 

தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கவும் வாய்ப்புள்ளது என்பதை அறிந்து கொண்டுதான் இவ்விளையாட்டை ஹக்கீம் அணியினர் செய்திருக்கலாம்.அக் கூட்டறிக்கையில் ஹனலியின் கையொப்பத்தை பெறவும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் 

அதற்கு ஹசனலி உடன்படவில்லை.மேலும்,மு.காவின் யாப்பு கூறும் விதத்தின் அடிப்படையிலும் குறித்த யாப்பு மாற்றம் நிகழவில்லை.இது தொடர்பில் தெளிவு படுத்துமாறு தேர்தல் 

ஆணையாளர் மு.காவிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.இக் கடிதத்தின் ஒரு பிரதியை ஹசனலிக்கும் வழங்குமாறு பிரதி இடப்பட்டுள்ளது.இப் பிரதி ஹசனலியின் கையைச் சென்றடையவில்லை.

ஹசனலியின் ஹக்கீமிற்கெதிரான ஆட்டம்

போராட்டங்கள் பல வகைப்படும்.மக்களை ஒன்று சேர்த்து போராடுவது ஒரு வகை.அறிவு சார் போராட்டங்களை மேற்கொள்வது இன்னுமொரு வகை.தற்போது ஹசனலி மக்களை ஒன்று கூட்டி ஹக்கீமிற்கெதிராக போராட்டம் செய்யும் 

வயதெல்லையை தாண்டிவிட்டார்.இருந்தாலும் குறித்தளவு மு.காவின் உயர் பீட உறுப்பினர்களை ஒன்று கூட்டி போராடுமளவு அவரிடம் பலமுள்ளது.பலமிக்க அணியினர் இவரோடு இணைவார்களாக இருந்தால் மக்களை ஒன்று கூட்டியும் இவரை முன் நிறுத்தியும் சில விடயங்களை இலகுவாக 

சாதித்துகொள்ளலாம்.தற்போது அவர் அறிவு சார் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.இதில் ஒரு அங்கமாக ஹக்கீம் விடும் தவறுகளை பகிரங்கமாக சுட்டிக் காட்டி அவரின் செல்வாக்கை குறைத்துவருகிறார்.எதிர்காலத்தில் பகிரங்க மேடையேறியும் 

பிரச்சாரங்களை முன்னெடுக்கலாம்.இவர் ஹக்கீமோடு முரண்பட்ட போது இவர்களின் முரண்பாட்டை தீர்க்க ஒரு குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இக் குழுவானது இவர்கள் இருவருக்குமிடையில் பல சுற்று பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டதோடு ஹசனலியின் முதற் கோரிக்கையான கட்சியிலிருந்து நீக்கப்பட்ட இரு மௌலவிமார்களையும் மீள் இணைக்குமாறும் பரிந்துரை செய்தது.அதன் பிரகாரம்
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog