அமெரிக்க உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மைக் பென்சி, நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்பின் தலைமையின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் விரைவில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
கடல் வழி போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவம் ஆகியன தொடர்பிலும் இருவருக்குமிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதன் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அமெரிக்கா வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment